விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயம் ரவி பங்கேற்றுள்ளார். 


தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளில் இருந்து வித்தியாசமாகவே இருக்கும்.  சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என வார நாட்களிலும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி பார்வையாளர்களை தங்கள் பக்கம் கட்டிப் போட்டு விடுகின்றனர். 






அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் “ராஜூ வூட்ல பார்ட்டி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமான ராஜூ தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இதில் இமான் அண்ணாச்சி, மதுரை முத்து, பிரியங்கா, தீபா, ஷிவா அரவிந்த் என பலரும் உள்ளனர். ராஜூ வீட்டு பார்ட்டிக்கு வரும் பிரபலங்களிடம் கேள்விகள், டாஸ்குகள் என இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


இதனிடையே  இதுவரை இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் தவிர்த்து நடிகை அமலா பால், நடிகர் மன்சூர் அலிகான், வெங்கட் பிரபு, வைபவ், நிதின் சத்யா, நடிகை விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அந்த வகையில் இந்த வாரம் தமிழ் சினிமாவின் 50 வருட கனவுப் படமாக உருவாயிக்கும் பொன்னியின் செல்வன் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாவதை முன்னிட்டு அப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். 






அவரிடம் வழக்கம் போல மதுரை முத்து கலாய்க்கும் வகையில் நடக்கும் காட்சிகள் அடங்கிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதேசமயம் சில கேட்விகளும் கேட்கப்படுகிறது. அதில் இந்த படத்தில் நடிக்கவுள்ளீர்கள் என சொன்னதும் உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருந்தது என கேட்கப்பட, எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு தான் முக்கியமாக இருந்தது. மணிரத்னம் என்னிடம் ராஜாவாகவே இருக்க சொன்னார். நடக்கும் போது கூட கீழே பார்க்காத என்றே என்னிடம் சொன்னார். 


மேலும் எந்த ஆர்டிஸ்ட் வந்தா நீங்க பாத்துட்டே இருப்பீங்க என எழுப்பப்பட்ட கேள்விக்கு “ஐஸ்வர்யா ராய்” என பதில் சொல்கிறார். அவங்ககிட்ட நீங்க என்ன சொன்னீங்க என கேட்கப்பட்ட கேள்விக்கு, அவங்க தான் என்கிட்ட பேசுனாங்க.... நீங்க என்னமா நடிக்கிறீங்க  என ஐஸ்வர்யா ராய்ஆச்சரியப்பட்டு சொன்னதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.