பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஏழு பாடல்கள் இடம்பெற்றிருக்கும் என்ற அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.


கோலிவுட்டில் ’பொன்னியின் செல்வன்’ ஃபீவர் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் ஆல்பம் குறித்த சுவாரஸ்ய அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ள்து.


பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பட வெளியீடு, இசை வெளியீடு, ப்ரொமோஷன் என பாகம் ஒன்றைப் போலவே முழுவீச்சில் படக்குழுவினர் இறங்கி செயல்பட்டு வருகின்றனர்.


மேலும் கடந்த சில நாள்களாக பொன்னியின் செல்வன் 2 அப்டேட்கள் வரிசையாக படையெடுத்து வந்த வண்ணம் உள்ளன.


பொன்னியின் செல்வன் 2 ட்ரெயலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச். 29ஆம் தேதி நடைபெறும் என  முன்னதாகத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.


இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இசை கம்போசிஷன், ஏ.ஆர்.ரஹ்மான், பாடகிகள் சின்மயி, சக்திஸ்ரீ கோபாலன், ஸ்வேதா மோகன் ஆகியோர் இருக்கும் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.


பொன்னியின் செல்வன் பாகம் இரண்டில் மூன்று பாடல்கள் தான் இருக்கும் என முன்னதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் மார்ச் 29ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 






ஏ.ஆர்.ரஹ்மான் மெட்டமைக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நிலையில் சென்ற பாகத்தைப் போலவே இந்த பாகத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுமா என எதிர்பார்த்து காத்துள்ளனர் கோலிவுட் ரசிகர்கள்.


முன்னதாக இந்தப் படத்தில்  ‘சக்திஸ்ரீ கோபாலன்’ பாடிய அகநக முழுநீளப் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வந்தியத்தேவன் - குந்தவை இடையேயான காதல் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ இணையத்தில் ஹிட் அடித்தது.


அதேபோல் நடிகர் விக்ரம் மற்றும் த்ரிஷாவின் ஆதித்த கரிகாலன், குந்தவை ட்ரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோக்களும் வெளியாகி லைக்ஸ் அள்ளின.


எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு, சென்ற ஆண்டு வெளியாகி, 500 கோடிகள் வரை வசூலித்து, மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.


விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி,  த்ரிஷா, ஜெயம் ரவி, ஷோபிதா, ஐஸ்வர்யா லெஷ்மி, பார்த்திபன்,சரத்குமார்,  பிரபு என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே  இந்தப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.