தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் நடிகர் பொன்னம்பலம். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் என அனைத்து முன்னணி நடிகரின் வில்லனாக நடித்தவர். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த பொன்னம்பலம் திடீரென படங்களில் காணாமல் போனார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு ரீ-என்ட்ரி கொடுத்தார். 


 



சிரஞ்சீவி - பொன்னம்பலம்


 


சமீபத்தில் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மீடியா மூலம் தனக்கு உதவுமாறு ஏராளமான திரை பிரபலங்களிடம் உதவியை நாடியுள்ளார். பலரும் அவருக்கு முன்வந்து உதவியுள்ளனர். அப்படி உதவியர்களில் ஒருவர் தான் தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி. நண்பர் ஒருவரின் மூலம் நடிகர் சிரஞ்சீவியின் போன் நம்பர் பெற்று அவருக்கு ஒரு மெசேஜ் மட்டுமே அனுப்பியுள்ளார் பொன்னம்பலம். "அண்ணா எனக்கு உடல் நலம் சரியில்லை. உங்களால்  முடிந்த உதவியை செய்யுங்கள்" என மெசேஜ் அனுப்பிய அடுத்து பத்தே நிமிடத்தில் பொன்னம்பலத்திற்கு போன் செய்துள்ளார் சிரஞ்சீவி. "ஹாய் பொன்னம்பலம். எப்படி இருக்கீங்க? உடம்புக்கு என்ன ஆச்சு என கேட்டார். உங்களுக்கு கிட்னி பிரச்சனையா? நான் இருக்கிறேன் நீங்கள் கவலை படாதீர்கள். உங்களால் ஹைதராபாத் வர முடியுமா? எனக் கேட்டார். இல்லை அண்ணா குடும்பம் எல்லாரும் இங்கே இருக்கிறார்கள் என்றவுடன் சரி உடனே சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமைக்கு செல்லுங்கள். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார். சரி டயாலிசிஸ் செய்ய ஏதாவது உதவி செய்வார் என பார்த்தால் உள்ளே என்ட்ரி பீஸ் 200 ரூபாய் கூட வாங்கவில்லை. கிட்ட தட்ட 45 லட்சம் வரை செலவானது. அனைத்தையும் அவரே பார்த்துக்கொண்டார். கடவுள் போல வந்து எனக்கு உதவினார் சிரஞ்சீவி அண்ணன்" என தெரிவித்தார் பொன்னம்பலம்.    


அது போல நடிகர் சரத்குமார் ஒரு சகோதரன் போல இன்று வரை எனக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். திரையுலகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எனது உடல் நிலையை பற்றி கூறி உதவி செய்யுமாறு  கூறி வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார், கமல்ஹாசன், தனுஷ் என பலரும் எனக்கு படங்களில் நடிக்க வரைவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். இப்போது தாடி வைத்து ட்ரை பண்ணலாம் என தாடி வைத்துள்ளேன். அப்பா, சகோதரன் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறன் என்றார் பொன்னம்பலம்.