நடிகர்களுக்கு அழகான முகம், ஸ்டைல், வெள்ளை தோல், வசீகரிக்கும் தோற்றம் இவை தான் முக்கியம் என கருதப்பட்ட தமிழ் சினிமாவில் பல விமர்சனங்களை தாண்டி பல போராட்டங்களை தாண்டி திறமை மட்டுமே இருந்தால் எதையும் சாதிக்கலாம் என நிரூபித்த நடிகர் தனுஷ். ஒரு சிலரை பார்த்தவுடனே பிடிச்சுடும் ஆன சில பேர பார்க்க பார்க்க தான் பிடிக்கும் எனும் தனுஷின் டயலாக் அவருக்கு மிகவும் பொருத்தமானது. 


Polladhavan Reunion: மீண்டும் இணைந்த பொல்லாதவன் டீம்... 15ம் ஆண்டு கொண்டாட்டம்!


15 ஆண்டுகளாக பொல்லாதவன் :


இன்று தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி  நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'பொல்லாதவன்' திரைப்படம். இப்படம் வெளியாகி நேற்றோடு 15 ஆண்டுகளை கடந்து விட்டாலும் இன்றும் உயர்ந்து நிற்க காரணம் இயக்குனர் வெற்றிமாறனின் அறிமுகம். இந்த  கூட்டணி அன்றும் இன்றும் என்றுமே ஒரு வெற்றி கூட்டணி. 


 






 


விஜய் சூர்யாவை பின்னுக்கு தள்ளிய தனுஷ் :


2007ம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக வெளியான 'பொல்லாதவன்', விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்' மற்றும் சூர்யாவின் 'வேல்' திரைப்படம் மட்டுமின்றி மச்சக்காரன், கண்ணாமூச்சி ஏனடா போன்ற படங்களுடன் நேரடியான மோதலுடன் வெளியானது. அனைத்து படங்களின் வசூலையும் முடக்கி வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றி யாருமே எதிர்பார்க்காத ஒரு வெற்றியாக அமைந்தது. ரசிகர்கள் நடிகர் தனுஷை கொண்டாடினர். பைக் பிரியர்களுக்கு இந்த படம் என்றுமே ஒரு ஃபேவரட் தான். பல்சர் பைக் தான் படத்தின் ரியல் ஹீரோவாக இருந்து படத்தை சூப்பர் ஹிட் அடிக்க வைத்தது.


 






கேக் வெற்றி கொண்டாடிய பொல்லாதவன் படக்குழுவினர் :


15 ஆண்டுகளாக 'பொல்லாதவன்' படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கோலாகலமாக நேற்று கொண்டாடினர். இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ், நடிகை திவ்யா ஸ்பந்தனா, ஜி.வி. பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.