எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் வெளியாகி திகிலை கிளப்பிய திரைப்படம் பீட்சா. குறைவான பட்ஜெட், நச்சுனெ திரைக்கதை போன்ற காரணங்களால் அமோக வரவேற்பை பெற்றது. யார் இந்த இயக்குநர்? என கவனிக்க வைத்தார் கார்த்திக் சுப்பாராஜ். விஜய் சேதுபதிக்கும் இந்தப்படம் சிறப்பான ஒரு படமாக அமைந்தது. 

Continues below advertisement


அதன்பின்பு திரையுலகில் விஜய் சேதுபதியின் பரபரக்க தொடங்கினார். குறைந்த பட்ஜெட், திகில் படம் என்ற ஒரு ட்ராக்கையே இது உருவாக்கியது. இந்த வரவேற்பை அடுத்து பீட்சா படத்தின் இரண்டாம் பாகமும் உருவானது. பெயரளவில் இரண்டாம் பாகமாக அறிவிக்கப்பட்ட அப்படம் வில்லா என்ற பெயரில் வெளியானது. பீட்சா படத்தில் எதிர்பார்ப்பு வில்லா மீது எக்கச்சக்கமாக இறங்கியது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அசோக் செல்வன்,சஞ்சிதா ஷெட்டி நடித்த இப்படம் மிரட்டலாக இருந்ததே தவிர எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.




இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பீட்சா படத்தின் 3ம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. Pizza 3 The Mummy என்ற இப்படத்தை மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். அஸ்வின், குருவ் நாராயணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் டீசல் இன்று வெளியானது. உறைய வைக்கும் திகிலுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது டீசரில் இருந்தே தெரிகிறது. பயம் கலந்த மிரட்டலான நடிப்பை அஸ்வின் கொடுத்துள்ளார். இப்படத்தின் டீசருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்