பான் இந்தியா திரைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் சேதுபதி ,சமந்தா ரூத் பிரபு, ராஷ்மிகா மந்தனா , விஜய் தேவரகொண்டா , நாக சைதன்யா என பலரும் பாலிவுட்டில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற தொடங்கியுள்ளனர். இது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாக சைதன்யா மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் அதிலும் பிரம்மாண்ட இயக்குநருடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






 


சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகத்தில் சைதன்யா :


முன்னதாக நாக சைதன்யா , அமீர் கானுடன் லால் சிங் சட்டா திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுதான் நாகை சைதன்யாவின் பாலிவுட் அறிமுகம் . இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகத்திற்கு சென்று வந்திருக்கிறார். இதன் மூலம் அவர் புதிய படத்திற்காக கதை கேட்டிருக்கலாம் என்றும் , பிரம்மாண்ட இயக்குநர் அடுத்த படத்திற்கு நாக சைத்தன்யாவை ஒப்பந்தம் செய்திருக்கலாம் என்றும் கிசு கிசுக்கப்படுகிறது.  நாக சைதன்யா சஞ்சய் லீலா பன்சாலி வீட்டை வெளியே வரும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இறுதியாக கங்குபாய் கத்தியவாடி திரைப்படத்தை  எடுத்திருந்தார்.







பாலிவுட் படங்களை நிராகரித்த சைதன்யா :



நாக சைதன்யாவிற்கு லால் சிங் சட்டா திரைப்படத்திற்கு முன்னதாக பாலிவுட் வாய்ப்புகள் வந்த வண்ணம்தான் இருந்திருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் சைதன்யா நிராகரித்திருக்கிறார். அதற்கான காரணம் என்ன என கேட்ட பொழுது “ நான் சென்னையில்தான் வளர்ந்தேன். அதன் பிறகு ஐதராபாத்திற்கு குடியேறினேன். அதனால் எனக்கு இந்தி அவ்வளவு சிறப்பாக இல்லை. நான் தென்னிந்தியன் போலத்தான் இந்தி பேசுவேன் என்றது. சில ஒரு முறைக்கு இருமுறை யோசித்தார்கள். அதனால்தான் சில சமயங்களில் ஹிந்திப் படங்களில் வாய்ப்பு வந்தவுடன் ஒதுங்கியிருக்கிறேன்” என்றார்.