ரஜினிகாந்த் உட்பட முக்கிய திரைப்பிரபலங்கள் ஹோலி பண்டிகையை தங்களது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்கள்.


ஹோலி


வண்ணங்களின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது ஹோலி. வட மாநிலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் இந்தத் திருவிழாவை தங்களது குடும்பத்தினரோடு கொண்டாடியுள்ளார்கள். அவர்கள் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


ரஜினிகாந்த்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் தனது மனைவி, இரு மகள்களுடன்  ஹோலி கொண்டாடியுள்ளார். இதே போன்ற ஒரு ஹோலி கொண்டாட்ட தினத்தின்போது தான் இயக்குநர் சிகரம் எனக் கொண்டாடப்படும் கே.பாலச்சந்தர், சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்தின் பெயரை மாற்றி ரஜினிகாந்த் என திரைப்பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.




அமிதாப் பச்சன்




பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினார்.


ராஷ்மிகா மந்தனா


 நடிகை ராஷ்மிகா மந்தனா தனது படக்குழுவினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.




 நதியா, ரன்பீர் கபூர், அலியா பட்






 நடிகை நதியா மற்றும் ரன்பீர் கபூர், அலியா பட் தம்பதியினர் ஒரே அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்கள். ரன்பீர் மற்றும் அலியாவின் மேல் துரத்தி துரத்தி நதியா வண்ணங்களைப் பூசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


 மிருணாள் தாகூர், விஜய் தேவரகொண்டா






  நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகிய இருவரும் தற்போது ஃபேமில் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார்கள் படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார்கள்.


ரகுல் ப்ரீத்




சமீபத்தில் திருமணமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது கணவர் ஜாக்கி பக்தாத் உடன் தல ஹோலி கொண்டாடியுள்ளார்.


ராய் லக்‌ஷ்மி




உடல் முழுக்க வண்ணங்களால் நிரப்பி நடிகை ராய் லக்‌ஷ்மி தனது ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டார்.


காஜல் அகர்வால்




 நடிகை காஜல் அகர்வால் தனது அம்மாவுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார்.