90ஸ் கிட்ஸ்களிடம் அன்றைய காலகட்டத்தில் உங்களின் ஃபேவரட் செலிபிரிட்டி யார் என கேட்டால் ஒரு சின்ன தயக்கமும் இன்றி உடனே வரும் பதில் பெப்சி உமா. ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினி தானே என சொல்லிவிட முடியாத அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தவர். இதுவரையில் எத்தனையோ நிகழ்ச்சி தொகுப்பாளினிகளை நாம் கடந்து வந்து இருந்தாலும் பெப்சி உமா முதன்மையானவர். அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு ஈடு இணையே இல்லை. 


வித்தியாசமான அடைமொழி : 


நடிகர்கள் அறிமுகமான படமோ அல்லது அவர்களுக்கு ஹிட் அடித்த ஒரு படத்தின் பெயரையோ தங்களின் அடைமொழியாக வைத்து அழைக்கப்படுவது உண்டு. ஆனால் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினிக்கு அந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரரான பெப்சியின் பெயரை அடைமொழியாக கொண்டு பிரபலமடைந்தவர் தான் பெப்சி உமா. 


 



ஸ்டார் தொகுப்பாளினி : 


சினிமா நடிகைகளுக்கு இணையான அழகு, தோற்றம், கவர்ந்து இழுக்கும் காந்த கண்கள், வசீகரிக்கும் உடை, கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு, தெளிவான தமிழ் உச்சரிப்பு என அனைத்து அம்சங்களுக்கும் பொருந்திய ஒரு வடிவம். பல ஸ்டார் ஹீரோக்களுடன் நடிக்கும் அழைப்பு வந்த போதும் எனக்கு சின்னத்திரையே போதும் என மனநிறைவோடு தான் தொகுத்து வழங்கி வந்த 'பெப்சி உங்கள் சாய்ஸ்' நிகழ்ச்சியை தொடர்ந்து 15 ஆண்டுகளாக தொகுத்து வழங்கியவர். 


பெப்சி உமா ரீ என்ட்ரி : 


அதற்கு பிறகு பல ஆண்டுகாலமாக எங்கே இருக்கிறார் என தெரியாமல் ரசிகர்களை ஏங்க வைத்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெப்சி உமா மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக மிக பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்தார். 


மேலும் அந்த நிகழ்ச்சியில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் ஒன்றை தெரிவித்து இருந்தார்.


 


தீவிர ரசிகை :


பெப்சி உமாவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு ரசிகை குறித்து பகிர்ந்து இருந்தார். மதுரையை சேர்ந்த ஒரு பெண்மணி பெப்சி உமாவின் மிக மிக தீவிரமான ரசிகையாக இருந்துள்ளார். இது வெளியில் தெரியாத ஒரு விஷயம். எந்த அளவிற்கு தீவிரம் என்றால் தன்னுடைய சுண்டு விரலை வெட்டி பார்சல் அனுப்பும் அளவுக்கு தீவிரமான ரசிகை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெப்சி உமா அந்த ரசிகைக்கு போன் செய்து கடிந்து கொண்டுள்ளார். அது தனக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என பகிர்ந்து இருந்தார் ஆல் டைம் ஃபேவரட் பெப்சி உமா.