விஜய் டிவியின் பாப்புலர் ஷோவான சூப்பர் நிகழ்ச்சியில் திடீரென,“ தான் கலந்துக்கொள்ளப் போவதில்லை“ என பென்னி தயாள் இன்ஸ்டாவில் தெரிவித்தது சர்ச்சையை எழுப்பிய நிலையில், மீண்டும் அவர் கலந்துக்கொள்வது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்வதோடு பல திறமையான பாடகர்களும் இந்நிகழ்ச்சியில் மூலம் உருவாக்கப்படுகிறார்கள். இதனால் சீசன் 1, சீசன் 2, சீசன் 3, சீசன்4 என எண்ணிக்கை நாளுக்கு நாள் அதகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் தான் தற்போது முந்தைய சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் மோதிக்கொள்வது போன்று நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கிறது. இதில் கடைசியாக நடந்து முடிந்த சூப்பர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமாகப் பேசப்பட்டவர் ஸ்ரீதர் சேனா. இவரின் பாடலுக்கே தனி ரசிகர்கள் உள்ள நிலையில், திடீரென அந்த போட்டியில் இருந்து வெளியேற்றினர். இதனையடுத்து நன்றாகப் பாடுபவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு, சுமாராகப் பாடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ரசிகர்கள் கூறிவந்தனர்.





இந்நிலையில் ஆரம்பம் முதல்லே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துக்கொண்டவர்களில் ஒருவர் தான் பென்னி தயாள். இசை மற்றும் பாடல்களில் மிகுந்த அனுபவம் கொண்ட இவர், “திடீரென இந்த சூப்பர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளப் போவதில்லை என பென்னி தயாள் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.


இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதோடு நன்றாகப் பாடுபவர்கள் மற்றும் நல்ல அனுபவம் உள்ள நடுவர்களை ஏன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினார்கள்? என்பது குறித்தக் கருத்துக்களையெல்லாம் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தெரிவித்துவருகின்றனர். ஏற்கனவே ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், பென்னி தயாள் வெளியிட்ட அறிவிப்பும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  


 






இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பென்னி தயாள் கலந்துக்கொள்ள விருப்பது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், சூப்பர் சிங்கர் டிரஸ்சிங் ரூமில், அரபிக்குத்து பாடலுக்கு பிரியங்கா, பென்னி தயாள். மாகாபா மற்றும் டீஜே ப்ளாக் ஆகியோர் நடனமாடும் வீடியோ ட்விட்டரில் வெளியானது. இதனைப்பார்த்த ரசிகர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மீண்டும் பென்னி  கலந்துக்கொள்ளப் போகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.