பெத்தி திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதனால் பெத்தி படத்தில் இருந்து இந்த காட்சிகள் நீக்கப்பட முடிவு செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா தெரிவித்துள்ளார்

Continues below advertisement

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள பெத்தி திரைப்படம் கடந்த ஜூன் 4 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. ஜான்வி கபூர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் . பெத்தி திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் இப்படத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. இதற்கு படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்ததோடு சம்பந்தபட்ட காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

ஜான்வி கபூர் கவர்ச்சி காட்சிகள் நீக்கம் 

பெத்தி படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா தனது எக்ஸ் பக்கத்தில் இப்படி கூறியுள்ளார் " ஒரு படைப்பாளியாக, சினிமா பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும், அவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும், மேலும் அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது ஒருபோதும் யாரையும் சங்கடமாகவோ அல்லது அவமதிக்கப்பட்டதாகவோ உணர வைக்கக்கூடாது. 'பெத்தி' திரைப்படத்தின் சில காட்சிகள் குறித்த கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்து, அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். திரையிலும் சரி, நிஜத்திலும் சரி, பெண்கள் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. எந்தவொரு பெண் கதாபாத்திரத்தையும் ஒரு பொருளாகக் கருதுவதோ அல்லது அவமதிப்பதோ எங்கள் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. திரைப்படத்தின் ஏதேனும் ஒரு பகுதி அவ்வாறு உணரப்பட்டிருந்தால், அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்,  மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறோம். கருத்துக்களை மதிப்பாய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். பார்வையாளர்களுடனான தொடர்பின் மூலமே சினிமா வளர்கிறது. கதைசொல்லிகளாகிய எங்களுக்கு, மாறிவரும் கண்ணோட்டங்களையும் உணர்வுகளையும் கவனத்தில் கொள்ளும் பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்படவும், போற்றப்படவும், கண்ணியத்துடன் சித்தரிக்கப்படவும் தகுதியானவர். வலிமையான கதாபாத்திரங்களைக் கொண்டாடும் மற்றும் அந்த விழுமியங்களை நிலைநிறுத்தும் கதைகளைச் சொல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தங்கள் கருத்துக்களை நேர்மையாகவும் உண்மையாகவும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி." 

Continues below advertisement