மாநாடு திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் இடையே சுமாரான வரவேற்பை பெற்றது.


அதைதொடர்ந்து எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தமாகமால் இருந்த சிம்பு, சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார்; கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்; 


பத்து தல படத்தில் சிம்பு ஏ.ஜி.ஆர். என்ற கேங்ஸ்டராக நடித்துள்ளார். அவர்களோடு பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது; படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், நடப்பாண்டிலேயே இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தாமதமானது.






இந்நிலையில், பத்து தல படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பாக, தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை இன்று காலை வெளியிட இருப்பதாக அறிவித்தது. அதன்படி தற்போது படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது; அதில் ‘பத்து தல’ திரைப்படமானது மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   


 






பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐதராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.