என்னைப் பற்றி கடந்த நில நாட்களாக ஊடகங்களில் அவதூறு பரப்பப்படுகின்றன . அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.


எனது உடைமைகள் காணாமல் போனது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் நான் புகார் கொடுத்துள்ளேன். சுபாஷ் சந்திர போஸ் என்ற நபர் மீது நான் புகார் கொடுத்திருந்தேன். அவர் என் வீட்டில் எனது செல்லப் பிராணிகளை பராமரிக்கும் பணியில் இருந்தார். அவர் மீது எனக்கு சந்தேகம் இருந்ததாலேயே அவரை போலீஸ் புகாரில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அவரை நான் தனிப்பட்ட முறையில் மிரட்டுவதாக அவதூறாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனக்கு அந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. நான் சட்டத்தை நம்புகிறேன். அதன்படியே நடக்கிறேன். 


அதேபோல் எனது மேக்கப் ஆர்டிஸ்டாக இருந்த செல்டன் ஜார்ஜ் என்பவரும் என்னைப் பற்றி ஊடகங்களில் அவதூறாகப் பேசியுள்ளார். அவர் பேச்சில் துளியும் உண்மையில்லை. என்னை அவமானப்படுத்தி அதன் மூலம் பெயர் பெற விரும்புகிறார்.


அவர்கள் பேச்சின் அடிப்படையில் என்னைப் பற்றி அவதூறு செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


பார்வதி வீட்டில் திருட்டு..


நடிகை பார்வதி நாயர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தவறாக சித்தரிக்கும் ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். காவல் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.


இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் சில ஊடகங்கள் நடிகை பார்வதி நாயரின்  புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் ‌அவதாறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது என்றும், இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என ஏற்கெனவே பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அவரே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பார்வதி நாயர் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அபுதாபியில் உள்ள ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றிய இவர், 2010 ஆவது ஆண்டில் "மிஸ் கர்நாடகா", "மிஸ் நேவி குயின்" பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.