பார்த்திபன் :



தமிழ் சினிமாவில் மாறுபட்ட இயகுநர்களுள் ஒருவர் பார்த்திபன். இவர் நடிப்பு மற்ற்றும் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் ஒத்த  செருப்பு சைஸ் .இந்த படம் முழுவதும் ஒரே கதாபாத்திரம் மட்டும் திரையில் தோன்றும் படியும், மற்ற கதாபாத்திரங்களை குரலாக மட்டுமே கொண்டு இயக்கி நடித்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்ததோடு படம் வெகுவாக பாராட்டப்பட்டது.இந்த நிலையில் வருகிற ஜூலை 15 ஆம் தேதி இரவின் நிழல் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மொத்தம் 90 நிமிடங்கள்தான் . உலகில் யாருமே இதுவரையில் எடுக்காத முறையில் அதாவது மொத்த படத்தையும் சிங்கிள் ஷார்ட்டாக எடுத்திருக்கிறார்.இது உலகின் கவனத்தை தமிழ் சினிமா பக்கம் ஈர்த்துள்ளது.




 


பார்த்திபனை தேத்திய ஏ.ஆர்.ரஹ்மான்:


இரவின் நிழல் திரைப்படம் வருகிற ஜூலை 15 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் வெளியாவதற்கு முன்னதாகவே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானும் பங்கேற்றிருக்கிறார். படத்தை காண வந்த மிகப்பெரிய வெளிநாட்டு இயக்குநர்களை எல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான்தான் வரவேற்று அமர வைத்தார்.


அப்போது வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பிரம்மாண்ட இயக்குநர்கள் எல்லாம் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை வெகுவாகா பாராட்டியிருக்கிறார்கள். உடனே எமோஷ்னலான பார்த்திபன் கண் கலங்கி அழுதே விட்டாராம் . ஊசி குத்தினால் கூட தாங்கி விடலாம் அதீத பாராட்டை தாங்க முடியாது என்கிறார் பார்த்திபன். மேடையில் அழுதபடி நின்றிருந்த பார்த்திபனை , ஏ.ஆர்.ரஹ்மான் ஓடி வந்து , கட்டி அணைத்து தேத்தினாராம்.அதுவரையில் கைக்குலுக்கி மட்டுமே பேசிய ரஹ்மான் முதன் முறையாக தன்னை கட்டிப்பிடித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம் என்கிறார் பார்த்திபன்.




ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பார்த்திபன்:


இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது குறித்து பார்த்திபன் கூறுகையில், நான் இந்தப் படத்தில் ஆஸ்கர் விருது வாங்கின ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் ஆஸ்கர் கிடைக்குமே என்ற நப்பாசையும் கொண்டுதான் அவரை அணுகினேன். அதுதான் பச்சை உண்மை. அதை சொல்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. முதன்முதலில் நான் ரஹ்மானை சந்தித்து இரவின் நிழல் கதை, அதை எப்படி ஒரே ஷாட்டில் எடுக்கப்போகிறேன் என்பது பற்றி கூறினேன். அதற்கு அவர் எப்படி ஒரே ஷாட்டில் எடுப்பீர்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பின்னர் நான் எல்லாவற்றையும்  விளக்கினேன். அவரும் இந்த பிராஜக்டில் இடம்பெறுவதை உறுதி செய்தார். அவர் பணம் காசு பற்றி பேசவே இல்லை. படத்திற்கான இசையை அவர் பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார். இவ்வாறு பார்த்திபன் கூறினார்.