இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். புதிதாக கார் வாங்கும் தம்பதி தங்கள் காரை பார்க்கிங் செய்வதில் தொடங்கும் பிரச்னை, பக்கத்து வீட்டுக்காரர்களான எம்.எஸ்.பாஸ்கர் - ஹரீஷ் கல்யாண் இடையே முற்றும் மோதல் எனும் கதைக்களத்துடன் இப்படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி கவனமீர்த்தது.

Continues below advertisement

ஹரீஷ் கல்யாணின் முந்தைய படமான எல்ஜிஎம் - லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இந்தத் தோல்வியை பார்க்கிங் ஈடுகட்டும் என்ற நம்பிக்கை ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின் ஹரீஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள பார்க்கிங் படம் பற்றி நெட்டிசன்கள் சொல்வது என்ன எனப் பார்க்கலாம்!

 

Continues below advertisement

“முதல் பாதி சூப்பர். ட்ரெய்லரில் நாம் பார்த்து கணித்த கதை தான். ஆனால், இரண்டாம் பாதி மிகச்சிறப்பு. இண்டர்வெல், க்ளைமேக்ஸ் சூப்பர்” எனக் கூறியுள்ளார்.

“ஒன்லைன் ஈகோ. சூப்பர் டைரக்‌ஷன், சூப்பர் திரைக்கதை” எனக் கூறியுள்ளார்.

 

“ஈகோ சண்டையை மையப்படுத்தி சிறப்பாக எடுக்கப்பட்ட த்ரில்லர் ஆக்‌ஷன் கதை” எனக் கூறியுள்ளார்.

 

“தரமான கண்டெண்ட். ஒன்ற வைக்கும், எண்டெர்டெயினிங்கான படம். எம்.எஸ்.பாஸ்கர் ஈர்க்கிறார்” எனக் கூறியுள்ளார்.

 

“கொடுத்த காசுக்கு வொர்த். ஹரீஷ் கல்யாண் இன்னும் நிறைய கண்டெண்ட் படங்கள் பண்ணுங்க” எனக் கூறியுள்ளார்.