பத்மபூஷண் விருதை பெற்ற அஜித்:

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆண்டுக்கான பத்மபூஷன் விருது நடிகர் அஜித் குமார் உள்பட மூவருக்கு அறிவிக்கப்பட்டது. 

 கலைத்துறையில் தனது பங்களிப்பிற்காக ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து நடிகர் எஸ். அஜித் குமார் பத்ம பூஷண் விருதைப் பெற்றார்

பத்ம விருதுகள்:

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயலற்றியவர்களை ஊக்குவிக்கும் வகையி ஆண்டுதோறும் பத்ம விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று விருதுகளும் இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படுகிறது. 

நன்றி தெரிவித்த அஜித்

இந்நிலையில் , விருது பெற்றது குறித்து நடிகர் அஜித் அறிக்கையும் வெளியிட்டிருந்தார், “இந்தியக் குடியரசுத் தலைவரால் மதிப்பிற்குரிய பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். 

மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இத்தகையை அங்கீகாரம் ஒரு பாக்கியம் மற்றும் நமது தேசத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

அதே நேரத்தில், இந்த அங்கீகாரம் தனிப்பட்ட பாராட்டு மட்டுமல்ல, பலரின் கூட்டு முயற்சிகள் மற்றும் ஆதரவின் சான்றாகும் என்பதை நான் நினைவில் கொள்கிறேன், என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

யார் யாருக்கெல்லாம் விருதுகள்?

2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 139 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  7 பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம விபூஷண் விருதுகள், 113 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 23 பெண்கள் பத்ம விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் சினிமா நடிகர் அஜித் குமார், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், செஃப் நிபுணர் தாமு, பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.