நடிகர் ரஜினிகாந்தின் மன்னன், சந்திரமுகி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பி.வாசு. ரஜினி எனப் பெயரை எடுத்ததும் அவரைப் பற்றிக் பக்கம் பக்கமான சுவாரசியத் தகவல்களைப் பகிர்கிறார் வாசு. இயக்குநரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் உடன் ச்சாய் வித் சித்ரா என்னும் நேர்காணலில் அவர் இந்தத் தகவல்களைப் பகிர்கிறார். 




அவர் இயல்பே அப்படித்தான். அவர் கண்ணைப் பார்த்தே அவரோட மனநிலையை என்னால் சொல்ல முடியும்.அந்தளவுக்கு அவரை நான் கவனிப்பேன். உடல்நிலை சரியில்லாம ஹாஸ்பிடல் போயிட்டு வந்த பிறகு அவரைப் போய் சந்திச்சேன். மனசு சரியா இருக்கானு கேட்டேன்.





“நான் ஒருமுறை ரஜினியிடம் ‘நீங்க நாயகன் மாதிரி இன்னும் ஒரு படம் பண்ணலை ரஜினி’ன்னு சொன்னேன். அவர் அதுக்கு சொன்ன பதில்தான் வியப்பா இருந்தது.நான் நாயகன் படம் பாத்துட்டு வீட்டுக்குப் போனேன் வாசு. முதல் ரெண்டு பெக்குக்கு ஒன்னுமே ஏறலை, மூணாவது பெக்குக்கும் ஒன்னுமே ஏறலை.அதைவிட உங்க நாயகன் படம் கொடுத்த போதை இன்னும் தெளியலைனு கமலிடம் சொன்னேன்னார். ஒரு மனிதன் எப்படி இவ்வளவு வெளிப்படையா பேசமுடியும்னு எனக்குத் தோணுச்சு. நான் ரஜினியைப் பற்றிப் பேசும்போதெல்லாம் எதோ மிகைப்படுத்தறதாகத்தான் பலர் நினைக்கறாங்க. இல்லை.அவர் இயல்பே அப்படித்தான்.


அவர் கண்ணைப் பார்த்தே அவரோட மனநிலையை என்னால் சொல்ல முடியும்.அந்தளவுக்கு அவரை நான் கவனிப்பேன். உடல்நிலை சரியில்லாம ஹாஸ்பிடல் போயிட்டு வந்த பிறகு அவரைப் போய் சந்திச்சேன். மனசு சரியா இருக்கானு கேட்டேன். அதுக்கு என்ன நல்லாருக்குன்னாரு. சார்,நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி திரும்பி வரலை அமிதாப் பச்சன் மாதிரி திரும்பி வந்திருக்கிங்க. அவரை மாதிரி இன்னும் பல ஆண்டுகாலம் நல்லபடியா வாழ்விங்கனு சொன்னேன்” என்கிறார்.


’ரஜினிக்காக நீங்கள் நிறைய வெற்றிப்படங்களை இயக்கியிருக்கிங்க, அவரோட சந்திரமுகி ஹரிதாஸுடைய ரெக்கார்ட்டையே வீழ்த்தியது’ என சித்ரா லட்சுமணன் தொடரவும்..


வாசு,”நான் சந்திரமுகி ரீமேக் செய்த கதையே சுவாரசியமானது.1998ல் ஏஷியாநெட்டில் ஒருநாள் மணிச்சித்திரதாழ் படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஷோபானாவை பலப்படத்தில் இயக்கியிருக்கேன் என்பதால் அந்தப் படத்தை பார்க்கலாம் என்கிற ஆர்வம். அப்போது என்னுடைய நான்கு வயது மகளும் அந்தப் படத்தைப் பார்த்தாள். மறுநாள் நான் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென கதவைத் தட்டும் சத்தம் யார்னு கேட்டேன். நான்தான் நாகவல்லினு மழலைக் குரல்ல என் பொண்ணு சொன்னாங்க.ஒரு குழந்தையைக் கூட ஈசியாக இந்தப் படம் சென்றடைகிறதுனு எனக்கு அப்போதான் தோணுச்சு.அப்படிதான் அதை ரீமேக் செய்யும் ஐடியாவும் வந்தது” என்கிறார் அவர்.