ஓவியா வீடியோ


கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது நடிகை ஓவியாவின் அந்தரங வீடியோ. முதலில் இந்த வீடியோவில் இருப்பது அவர்தானா என்பது குறித்து ஓவியாவோ வேறு யாரோ விளக்கமளிக்கவில்லை. அந்த வீடியோவில் இருப்பது அவர் தான் என்பதற்கு ஒரு டேட்டூதான் ஆதாரமாக சொல்லப்படுகிறது.  கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை கேட்டு கெஞ்சி வருகிறார்கள் பலர். வீடியோவை பார்த்தது மட்டுமில்லாமல் ஓவியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் உங்க வீடியோ சூப்பர் இன்னும் கொஞ்சம் பெருசா இருந்திருக்கலாம் என கமெண்ட் செய்தும் வருகிறார்கள். 


கொஞ்சம் மனவலிமை அதிகம் உடைய பெண் என்பதால் இந்த விஷயத்தை ஓவியா அவர்களின் போக்கிலேயே டீல் செய்து வருகிறார். இதுவே மனவலிமை குறைவான ஒருவராக இருந்து அவர் மன உளைச்சலுக்குள் சென்றிருந்தால் விளைவுகள் மோசமானதாக இருந்திருக்கலாம். இந்த வீடியோ பற்றி ஓரளவு நடுநிலையாக இருந்து விவாதிக்க நினைப்பவர்கள் தங்கள் தரப்பில் சில வாதங்களை முன்வைக்கிறார்கள். அவற்றை கீழே பார்க்கலாம்


வீடியோ எடுத்ததே தப்பா ?


முதலில் இந்த மாதிரியான வீடியோவை ஏன் எடுக்க வேண்டும் அதுவே தப்பு பின் வீடியோவை பார்ப்பவர்களை குறை சொல்ல முடியுமா என்கிற வாதத்தை சில முன்வைக்கிறார்கள். இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் முதலில் தங்களை தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ளலாம். நீங்க செல்ஃபீ எடுப்பதற்கான நோக்கம் என்ன? அதுவும் இதுவும் ஒன்றில்லை என்றில்லை என்று  நீங்கள் சொன்னால் அது உங்கள் அறியாமை. டெக்னாலஜியின் பிடியில் இருக்கும் நாம் இன்றைய சூழலில் எல்லாவற்றையும் நேரடி அனுபவமாக உணர்வதை விட செல்ஃபோன் கேமராக்களின் வ்ழி உணர்வதையே நிஜமான அனுபவமாக நினைக்கிறோம். ஒரு பெரிய ஹோட்டலில் போய் சாப்பிட்டால், ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்றால் , நம் வாழ்க்கையின் எல்லா முக்கியமான தருணங்களையும் ஃபோட்டோக்களாக பதிவு செய்து அதை மற்றவர்கள் முன் பிரகடனப்படுத்திக் கொள்ளும் போது (பகிர்ந்துகொள்வது இல்லை) தான் நமக்கே  நம் வாழ்க்கைத் தருணங்கள் முக்கியமானதாக தெரிகின்றன. 


அதே மாதிரிதான் இன்றைய தலைமுறையினர் தங்கள் அந்தரங்கத்தை வீடியோக்களாகவோ புகைப்படங்களாகவோ பதிவு செய்துகொள்ள விரும்புவதும். 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் 19 சதவீத இந்திய காதலர்கள் தங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது அதை ஸ்மார்ஃபோனில் வீடியோவாக பதிவு செய்வதாக தெரியவந்துள்ளது. இப்படி செய்யும்போது அந்த வீடியோ இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் எடுக்கப்படுகிறதா இல்லையா என்பது மட்டுமே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது. 


வீடியோ எப்படி வெளியானது ?


இந்த வீடியோ சொந்த விருப்பத்தின் பெயரால் வெளியிடப்பட்டதா , இல்லை எதிர்பார்க்காத விதமாக கசிந்ததா என்பது ஒரு விவாதப்பொருள் இல்லை. ப்ரோமோஷனுக்காக வெளியிடப்பட்டிருக்க 50 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் நாம் பயண்படுத்தும் பல ஆப்களுக்கு நம் கேலரியில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயண்படுத்திக்கொள்ள ஆக்ஸஸ் கொடுத்து வைத்திருக்கிறோம். உங்கள் செல்ஃபோனில் ஒரு ஆப் மூலம் நீங்கள் இன்னொருவரின் அந்தரங்கத்தைப் பார்க்கிறீர்கள் என்றால் அதே ஆப் உங்கள் செல்ஃபோனில் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை வெளியிடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. 


இன்னொருவரின் அந்தரங்கத்தை பார்ப்பதில் அப்படி என்ன சுவாரஸ்யம்


ஒவ்வொரு முறை ஒரு பிரபலத்தின் வீடியோ கசிந்தால் அதை ஏன் ஒருவர் 'உங்கள் அந்தரங்க வீடியோவை பார்த்தேன் ' என்று அவரிடமே தெரியப்படுத்துகிறார் ? இணையத்தில் ஆபாசப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான தளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த தளங்களில் இலவசமாகவே நீங்கள் வீடியோக்களைப் பார்க்கலாம். அதிலும் இன்று இன்ஸ்டாகிராமே கிட்டதட்ட ரீல்ஸ் என்கிற பெயரில் ஆபாசத்தை கொட்டித் தீர்க்கிறது. இது எல்லாம் இருந்து ஒரு பிரபலத்தின் வீடியோ வெளியாகும் போது ஏன் இவ்வளவு சலசலப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர் ஒரு பிரபலமாக இருப்பதே. தான் படங்களில் பார்த்து எட்டமுடியாதவராக தெரிந்த ஒரு பிரபலத்தின் நிர்வானமான வீடியோ தரும் கிளர்ச்சிதான் வெட்கமே இல்லாமல் வீடியோ கொடுத்தால் ஃபாலோ செய்கிறேன் என்று சொல்ல வைக்கிறது. இதனை அந்த பிரபலத்திடமே தெரியப்படுத்துவதும் அந்த கிளச்சியுணர்வுக்காகதான். 


நல்ல கதாபாத்திரங்களுக்காக இல்லாமல் நடிகைகளை காலம் காலமாக கிளாமரைஸ் செய்து வரும் மசாலா படங்கள் ஒரு ஆபாச படத்திற்கு நிகரான தாக்கத்தை தான் இங்கு வெகுஜனத்திடம் ஏற்படுத்துகின்றன என்பதை மறைப்பதற்கு இல்லை.