கூலி 

லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. நாகர்ஜூனா , சத்யராஜ் , உபேந்திரா , செளபின் சாஹீர் , ஸ்ருதி ஹாசன் என படத்தில் ஐந்து மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கூலி படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் படத்தைப் பற்றிய முக்கியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

கூலி பட்ஜெட் 

கூலி திரைப்படம் சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் 280 கோடியும் படத்தின் இயக்குநர் லோகேஷ் 60 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் வெளி நாட்டு ரிலீஸ் உரிமம் ரூ 75 கோடிக்கும் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை ரூ 120 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ரஜினி 70 நாள் கால்ஷீட் 

கூலி படத்திற்கு ரஜினிகாந்த் மொத்தம் 70 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஆனால் பெரும்பாலான காட்சிகள் ரஜினியின் டூப் வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 45 நாட்கள் ரஜினிக்கு டூப் வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின்  அதிகப்படியான ஆக்‌ஷன் காட்சிகள் இருந்ததால் டூப் வைத்து எடுக்க வேண்டிய அவசியம் இருந்ததால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

கூலி பட அனுபவம் பற்றி லோகேஷ் 

கூலி படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் " இந்த ஓராண்டு காலத்தில் ரஜினி என்னை வாழ்க்கையைப் பற்றி நிறைய விஷயங்களை உணரவைத்தார் . என்னை சிந்திக்க வைத்திருக்கிறார். அழ வைத்திருக்கிறார். இந்த ஒரு வருடம் தலைவரும் என்ன ஒரு நல்ல ட்ரிப் என்றுதான் எடுத்துக் கொள்கிறேன்" என கூறினார்