இந்த வாரம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளைச் சேர்ந்த படங்கள் முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன.
பெட்டி (Peddi) – நெட்ஃப்ளிக்ஸ் – ஜூலை 9
புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக உருவாகிய படம் பெட்டி. ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து, போமன் இரானி, ரவி கிஷன், விஜி சந்திரசேகர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் 4 ஆம் தேதி திரையரங்கில் வெளியான பெட்டி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இன்று ஜூலை 9 ஆம் தேதி முதல் பெட்டி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.
பால்டி (Balti) – சோனி லைவ் – ஜூலை 11
கபடியை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் டிராமா மலையாள திரைப்படம் பல்டி. ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், ப்ரீத்தி அஸ்ரானி, அல்போன்ஸ் புத்ரன், செல்வராகவன், சிவ ஹரிஹரன், ஜெக்சன் ஜான்சன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், பூர்ணிமா இந்திரஜித் ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே திரையரங்கில் வெளியானபோதும் படத்தின் ஓடிடி ரிலீஸ் தாமதமானது. ஜூலை 10 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது பல்டி
பரிமளா & கோ - zee5 - ஜூலை 10
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஊர்வசி , ஜெயராம் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , அனந்திகா சனில்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் பரிமளா & கோ. காமெடி த்ரில்லர் கலந்து உருவான இப்பாம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. இப்படம் ஜூலை 11 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சிங் கீதம் (Sing Geetam) – நெட்ஃப்ளிக்ஸ் – ஜூலை 11
இசையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படமான சிங் கீதம், கனவுகளுக்காக போராடும் இளைஞர்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது. இசை மற்றும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்படம் ஜூலை 11 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
பதிபத்னிஔர்வோதோ (Pati Patni Aur Woh Do) – நெட்ஃப்ளிக்ஸ் – ஜூலை 11
இந்தியில் உருவாகியுள்ள பதி பத்னி ஔர் வோ தோ திரைப்படம் காதல், குடும்பம் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு படமாகும். இலகுவான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 11 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஸ்போர்ட்ஸ் டிராமா , டார்க் காமெடி த்ரில்லர் மற்றும் ஃபீல் குட் என வெவ்வேறு ரசிகர்களுக்கு ஏற்ற விதமான படங்களை ரசிகர்கள் இந்த வாரம் பார்த்து மகிழலாம்
