2025 ஆஸ்கர் விருதுகள்


திரைத்துறையின் உச்சபட்ச விருதாக கருதப்படும் விருது ஆஸ்கர். கடந்த 96  ஆண்டுகளாக திரைக்கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது அகாடமி ஆஃப் மோஷன் பிக்ச்சர்ஸ் .அந்த வகையில்  2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குகிறார்.  டோஜா கேட் , அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் நிகழ்ச்சியில் இசையரங்கேற்றுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. 


ஆஸ்கர் விருது வென்றவர்கள்


இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் ஷான் பேக்கர் இயக்கிய அனோரா திரைப்படம் அதிகப்பட்சமாக 5 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த இயக்குநர் , சிறந்த படம் , சிறந்த படத்தொகுப்பு , சிறந்த திரைக்கதை , சிறந்த நடிகை என மொத்தம் ஐந்து விருதுகளை அள்ளியது அனோரா. சிறந்த நடிகருக்கான விருதை தி ப்ரூட்டலிஸ்ட் படத்திற்காக ஏட்ரியன் பிராடி வென்றார்.


டம்மியாகிப் போன ஆஸ்கர்


ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது விழா மீது ஏதாவது ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும். எப்போதும் போல நேரமின்மை இந்த ஆண்டு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. முதல் விருதாக சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப் பட்டது. இந்த விருதை ரியல் பெயின் படத்திற்காக கைரன் கல்கின் வென்றார். முதலில் மேடையில் பேசுபவர் எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கிறார் என்பதைப் பொறுத்து தான் அடுத்தடுத்து வருபவர்கள் பேசுவார்கள். விருது வாங்கிய உற்சாகத்தில் கைரன் கல்கின் கொடுத்ததை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டு பேசினார். இதனால் அடுத்தடுத்து வந்தவர்களும் அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொண்டார். இது தவிர்த்து அமேசான் நிறுவனம் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை தயாரிக்க இருக்கிறது. இதற்கான ப்ரோமோஷனாக இடையில் நடன நிகழ்ச்சியும் நேரத்தை விணடித்தது.  இதனால் அடுத்தடுத்து பேச வந்தவர்களுக்கு நேரமின்மை காரணமாக பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. 


இதனை பார்த்த ரசிகர்களுக்கு இவங்களுக்கு இதுவே வேலையா போச்சு என அதிருபதியை வெளிப்படுத்தி வருகிறார்கள். மற்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு கனனிக்கும் வகையில் யாரும் பேசாசதும் இந்த ஆண்டு ஆஸ்கர் டம்மியாகி போனதற்கு ஒரு காரணம்