Oscars 2024 LIVE: போட்டி போட்டு ஆஸ்கர் விருதுகளை தட்டித்தூக்கிய படங்கள் - அப்டேட்டுகள் உடனுக்குடன்!
Oscars 2024 Live Updates: சினிமா உலகின் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பற்றிய அப்டேட்டுகளை உடனுக்குடன் காணலாம்
7 ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ள கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வரும் 21ம் தேதி, இந்தியாவில் ஜியோ சினிமா ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது
இதுவரை 9 முறை ஆஸ்கரை தவறவிட்ட பிராட்லி கூப்பர், இந்தாண்டில் 10வது முறையாக ஆஸ்கரை தவறவிட்டுள்ளார்.
முன்னதாக லா லா லேண்ட் படத்திற்காக ஆஸ்கரை வென்ற எம்மா ஸ்டோன், புவர் திங்க்ஸ் படத்திற்காக (சிறந்த நடிகை) இரண்டாவது முறை ஆஸ்கரை பெற்றுள்ளார்.
"நல்லதோ கெட்டதோ, நாம் அனைவரும் ஓப்பன்ஹைமர் உலகில் வாழ்கிறோம், எனவே இதை உலகெங்கும் அமைதியை நிலைநாட்டுபவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்." சிலியன் முர்ஃபி
ஆஸ்கர் விருதுக்கு 8 முறை நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் முதல்முறையாக ஓப்பன்ஹெய்மர் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றார் கிறிஸ்டோபர் நோலன்
ஜஸ்டின் ட்ரைட் இயக்கிய Anatomy of a Fall படத்துக்கு 2024 ஆம் ஆண்டின் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் ஓப்பன்ஹெய்மர் படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது. இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், தயாரிப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநராக கிறிஸ்டோபர் நோலன் தேர்வு செய்யப்பட்டார். ஓப்பன்ஹைமர் படத்துக்காக அவர் இந்த விருதை வென்றார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகராக சிலியன் முர்ஃபி (Cillian Murphy) ஓப்பன்ஹைமர் படத்துக்காக தேர்வு செய்யப்பட்டார்.
பிரபல நடிகரும், பொழுதுபோக்கு குத்துச்சண்டை வீரருமான ஜான் சீனா ஆடையில்லாமல் ஆஸ்கர் மேடையில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. Peacemaker என்ற வெப் தொடருக்கு சிறந்த ஆடையலங்காரம் விருது வழங்கலாமா என கிண்டலாக கேட்பது போல அவர் இவ்வாறு செய்தார்.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படம் சிறந்து துணை நடிகர், எடிட்டிங், ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் 2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளை வென்றது.
20 Days in Mariupol என்ற உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய போரை மையப்படுத்திய ஆவணப்படுத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
சிறந்த விஷூவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருதை Godzilla Minus One படம் வென்றது. இந்த விருதை டகாஷி .யமசாகி, கியோகோ ஷிபுயா, மசாகி டகாஹஷி, டட்சுஜி நிஜோமா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஆஸ்கர் 2024 விருது விழாவில் POOR THINGS படம் சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம், சிறந்த தயாரிப்பு, சிறந்த உடையலங்காரம் ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளை தட்டித்தூக்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை வென்றது அமெரிக்கன் பிக்ஷன் படம் (American Fiction). இதற்காக கார்ட் ஜெஃபர்சன் விருது பெற்றார்
ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அனிமேஷன் குறும்படமாக War Is Over! Inspired by the Music of John & Yoko தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை தேவ் முல்லன்ஸ் மற்றும் பிராப் புக்கர் பெற்றுக் கொண்டனர்
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றார் டிவைன் ஜாய் ரண்டால்ஃப் ( Da'Vine Joy Randolph). அவர் 'The Holdovers' என்ற படத்துக்காக விருது பெற்றார்.
Background
2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா வரும் இன்று நடைபெற்றது. முன்னதாக விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதி வெற்றியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு வெளியான ஓப்பன்ஹெய்மர், பார்பீ, கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன், அனாடமி ஆஃப் ஏ ஃபால், புவர் திங்ஸ், மேஸ்ட்ரோ, உள்ளிட்ட பல்வேறு படங்கள் இந்த முறை விருது வெல்லும் பட்டியலில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. இதில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியுள்ள ஓப்பன்ஹெய்மர் படம் மட்டும் மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்கள் தவிர்த்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் விருதுக்கு தேர்வாகின. இதில் சில படங்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெறாத நிலையில் இன்னும் சில படங்கள் போட்டியில் நிலைத்துள்ளன.
ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்ச்சியை ஒரு பிரபலம் தொகுத்து வழங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பிரபல காமெடியன் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளரான ஜிம்மி கிம்மல் இந்த நிகழ்ச்சியை நான்காவது முறையாக தொகுத்து வழங்க இருக்கிறார். எந்த நடிகர், எந்தப் படம் ஆஸ்கர் விருதை தட்டிச் செல்லப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியான நிலையில் ஆஸ்கர் விருது விழா பிரபல ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகிறது. வரும் மார்ச் 10 ஆம் தேதி மாலை 7 மணியளவில் லாஸ் எஞ்சலஸில் தொடங்க இருக்கும் ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணியளவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. விருது அறிவிக்கப்படுவது தவிர்த்து விருது வென்ற கலைஞர்களின் உரையும் இதில் இடம்பெறும்.
ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களை ரசிகர்கள் பார்க்கும் வகையில் பல்வேறு ஓடிடி தளங்கள் இந்தப் படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிஸ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் லைவ் ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் மற்றும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிடவை இடம்பெற்றுள்ளன. இது தவிர்த்து ஒரு சில படங்கள் திரையரங்கங்களில் திரையிடப்பட்டு வருகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -