2024 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் படம் பல பிரிவுகளில் விருதை வென்றுள்ளது.
ஒப்பன்ஹெய்மர் (Oppenheimer)
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓப்பன்ஹெய்மர் படம் வெளியாகியது. அணு ஆயுதத்தை முதல் முறையாக கண்டுபிடித்த ராபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. கிலியன் மர்ஃபி , ஃப்ளோரன்ஸ் பியூ, ராபர்ட் டெளனி ஜூனியர் . எமிலி பிளண்ட் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம், நடிகர், இயக்குநர், துணை நடிகர், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இசை ஆகிய 7 பிரிவுகளில் விருதுகளை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) வென்றது.
கதை
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி , அமேரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அனு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சிகளில் கடுமையாக ஈடுபட்டிருந்தன. குறிப்பாக ஹிட்லர் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிந்துகொண்ட அமெரிக்கா இயற்பியலாளரன ஓப்பன்ஹெய்மரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தன.
இயற்பிய மீது அதீத காதல் கொண்ட ஓப்பன்ஹெய்மர் மற்றும் அவரது ஆராய்ச்சியாளர் குழு இணைந்து முதல் அனு ஆயுத சோதனையை 1945 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள். தனக்கு இயற்பியல் மீது இருந்த ஆர்வத்தின் உந்துலால் மனித சமூதாயத்திற்கே அழிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆயுதத்தை ஓப்பன்ஹெய்மர் உருவாக்கியிருந்தார். விளைவாக ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அழிவை அவர் தன் கண் முன்னால் பார்த்தார்.
அனு ஆயுதத்தை உருவாக்கிய பின் ஓப்பன்ஹெய்மர் உளவியல் ரீதியாக எதிர்கொண்ட மன உளைச்சல் . கம்யூனிஸ ஆதரவாளர் என்று அமெரிக்கா அவரை விசாரணைக்கு உட்படுத்தியது ஆகிய நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப் பட்டுள்ளது.
ஆஸ்கரில் ஓப்பன்ஹெய்மர்
கிறிஸ்டோஃபர் நோலனின் படங்களுக்கு திரைப்படம் ஆர்வலர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு எப்போது இருந்து வருகிறது. சமீப காலத்தில் வெகு ஜன இளைஞர்கள் அதிக விவாதிக்கப் படும் ஒருவராக அவர் இருக்கிறார். அவர் இயக்கிய இண்டர்ஸ்டெல்லார் (Interstellar , inception , batman trilogy , momento ) ஆகிய படங்கள் இந்திய திரைப்படம் ரசிகர்களால் அலசி ஆராயப்பட்டவை. நான் லீனியர் திரைக்கதை , அறிவியல்பூர்வமாக சிந்திக்க வைக்கும் கதைசொல்லும் முறை , அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் தத்ரூபமான காட்சிகளை உருவாக்குவது என பல்வேறு விதங்களில் புகழப்படும் ஒரு இயக்குநர் நோலன்.
ஹாலிவுட்டை காப்பாற்றிய பாக்ஸ் ஆஃபிஸ்
கொரோனா நோய் தொற்று காலத்திற்கு பின் உலகின் அனைத்து திரைத்துறைகளும் பெரும் பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் சரிவை எதிர்கொண்டு வந்தன. திரையரங்கத்தை நோக்கி மக்களை ஈக்க நல்ல படங்களின் வருகையும் குறைவாகவே இருந்தது. அதிகம் எதிர்பார்க்கப் பட்டு வெளியான இண்டியானா ஜோன்ஸ், பிளாஷ் உள்ளிட்டப் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. எப்போது ஹாலிவுட் சினிமாவை காப்பாற்றி வந்த நடிகர் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபள் படம் கூட எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படியான நிலையில் வெளியான ஓப்பன்ஹெய்மர் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளை நோக்கி படை எடுக்க வைத்தது . இந்தியாவில் மட்டும் 100 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்த இந்தப் படம் உலகளவில் 8 ஆயிரம் கோடி வசூல் ஈட்டியதாக தகவல் வெளியானது. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் இப்படம் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டது .
ரசிகர்களால் கொண்டாடப் படும் நோலன்
ஓப்பன்ஹெய்மர் படத்தை முழுமுழுக்க ஐமேக்ஸ் கேமராவில் படம் பிடித்தார் நோலன். மேலும் இப்படத்தில் அனு குண்டு வெடிக்கும் காட்சிக்காக நிஜமான சிறிய வடிவிலான ஒரு அனு குண்டை உருவாக்கி அதை வெடிக்க வைத்து படமாக்கி இருக்கிறார்.
கிலியன் மர்ஃபி
இப்படத்தில் கிலியன் மர்ஃபி ஓப்பன்ஹெய்மராக நடித்தார். கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய பேட்மேன், தி டார்க் நைட், இன்செப்ஷன், டன்கிர்க் உள்ளிட்டப் படங்களில் துணைக்கதாபாத்திரங்கள் நடித்த கிலியன் மர்ஃபி முதல் முறையாக நோலன் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
இது தவிர்த்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ’பீக்கி ப்ளைண்டர்ஸ்’ (Peaky Blinders) தொடரில் இவர் நடித்த தாம்ஸ் ஷெல்பி கதாபாத்திரம் பரவலான ரசிக கவனத்தைப் பெற்றது.
இப்படத்தில் நடித்தது தொடர்பான தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட கிலியன் மர்ஃபி ” ’ஒரு பெரியப் பொறுப்பை எடுத்துக்கொள்வதற்கு இதுவே மிகச் சரியான நேரமாக எனக்குத் தோன்றியது அதனால் நான் உடனே சம்மதித்தேன். அது ஒரு மகிழ்ச்சியான நாள். ’மேலும் இந்த படத்திற்கு தயாராகும்போது அணுகுண்டு செயல்படுவது குறித்த நிறைய வகுப்புகள் எடுக்கப் பட்டன. ஆனால் தான் அவற்றைத் தவிர்த்துவிட்டு தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியதாக சிலியன் தெரிவித்தார். தான் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் மிகவும் சிக்கலான ஒரு கதாபாத்திரமாகவும் அதே நேரத்தில் மிகவும் புக்ழ்பெற்ற ஒரு கதாபாத்திரம் என்பதால் அதில் நடிப்பது தனக்கு மிக சுவாரஸ்யமான ஒரு அனுபவமாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.”
ராபர்ட் டெளனி
மேலும் இப்படத்தில் ராபர்ட் டெளனி ஜூனியர் லெவிஸ் ஸ்ட்ராஸ் என்கிற துணைக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். ஓப்பன்ஹெய்மர் மீதான தனிப்பட்ட பொறாமை காரணமாக் அவருக்கு எதிராக செயல்பட்டதாக இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் அயன் மேனாக மட்டுமே ரசிகர்களால் அறியப்படும் ராபர்ட் டெளனி அவ்வப்போது மாறுபட்ட சில கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார். ஷெர்லாக் ஹோல்ம்ஸ், ஸோடியாக் உள்ளிட்டப் படங்களில் இவரது கதாபாத்திரங்கள் கவனம் பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பாராட்டுக்களைப் பெற்றது.