Oscar Awards: 70, 80 வயதிலும் அசத்தல்... அதிக வயதில் ஆஸ்கர் விருதை வென்ற பிரபலங்கள் யார்? யார்?

1929ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 3100க்கும் மேற்பட்ட ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

திரைப்படத்துறையின்உச்சபட்ச கௌரவமாகக் கருதப்படுபவை அமெரிக்க திரைத்துறையால் வழங்கப்படும்
ஆஸ்கர் விருதுகள் எனப்படும் அகாடெமி விருதுகள்.

Continues below advertisement

ஆஸ்கர் விருதுகள்:

தன் திரைப்பயணத்தில் ஒருமுறையாவது ஆஸ்கர் விருதைப் பெற்றுவிட மாட்டோமா என ஹாலிவுட் தாண்டி உலகம் முழுவதுமுள்ள பல கலைஞர்களையும் ஏங்க வைக்கும் இந்த ஆஸ்கர் விருதுகள், 1929ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா,இன்று (மார்ச்.12) மாலை தொடங்கி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை (மார்ச். 13) காலை 5.30 மணிக்குத் தொடங்கி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. 

1929ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 3100க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. வயது பாரபட்சிமின்றி சிறு வயது கலைஞர்கள் தொடங்கி மூத்த திரைக் கலைஞர்கள் வரை பலரும் ஆஸ்கர் பெற்று தங்கள் ரசிகர்களை மகிழ்வித்துள்ளனர். அந்த வகையில் இதுவரை அதிக வயது மற்றும் மிகக் குறைந்த வயதில் விருது வென்றோரின் பட்டியலைக் காணலாம்.

அதிக வயதில் விருது வென்ற நடிகர், நடிகைகள்:

ஆண்டனி ஹாப்கின்ஸ் ( வயது 83) - த ஃபாதர் (The Father)

ஹாலிவுட்டின் கொண்டாடப்படும் நடிகர்களுள் ஒருவரான ஆந்தனி ஹாப்கின்ஸ் த ஃபாதர் படத்துக்காக 2020ஆம் ஆண்டு விருது பெற்றார். 

நடிகர், இயக்குநர் என பன்முகக் கலைஞராக விளங்கும் ஆண்டனி ஹாப்கின்ஸ் இரண்டாவது முறை தன் 83ஆம் வயதில் ஆஸ்கர் விருது வென்ற நிலையில் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

 

ஜெஸிகா டேண்டி (வயது 80) - டிரைவிங் மிஸ் டெய்ஸி (Driving Miss Daisy)

மேடை நாடகம் தொடங்கி சினிமா வரை பயணித்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஜெசிகா டேண்டி பிரிட்டிஷ் - அமெரிக்க நடிகை ஆவார். 1989ஆம் ஆண்டு வெளியான டிரைவிங் மிஸ் டெய்ஸி படத்துக்காக தன் 80ஆம் வயதில் ஆஸ்கர் வென்றார்.

 

ஹென்றி ஃபோண்டா (வயது 76) ஆன் கோல்டன் பாண்ட் (On Golden Pond) -  

அமெரிக்க நடிகரான ஹென்றி ஃபோண்டா 50 ஆண்டுகள் ஹாலிவுட் திரைத்துறையில் கோலோச்சியவர். 1981ஆம் ஆண்டு வெளியான குடும்பப் படமான On Golden Pond படத்துக்காக ஹென்றி ஃபோண்டா விருது வென்றார்.

கேத்ரின் ஹெப் பர்ன் - (வயது 74) ஆன் கோல்டன் பாண்ட் (On Golden Pond)

 

ஹாலிவுட்டின் முன்னணி நடிகையாக 60 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சிய கேத்ரின்  ஹெப் பர்ன் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்று அதிக முறை ஆஸ்கர் வென்ற நடிகை எனும் சாதனையைத்  தக்கவைத்துள்ளார்.

ஆன் கோல்டன் பாண்ட் படத்துக்காக தன் 74ஆவது வயதில் ஆஸ்கர் வென்று அசத்தினார்.

ஃப்ரான்சஸ் மெக்டோர்மெண்ட் - வயது 63 - நோமட்லேண்ட் (Nomadland)

அமெரிக்க நடிகையும் தயாரிப்பாளருமான ஃப்ரான்சஸ் மெக்டோர்மெண்ட் தன் 63ஆம் வயதில் நோமட்லேண்ட் படத்துக்காக விருது வென்றார்.

 

இதுவரை 4 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola