சென்ற ஆண்டு வெளியான Everything, Everywhere All at Once பட த்துக்காக ஆஸ்கர் வென்று,  ‘ஆஸ்கர் விருதினை வென்ற முதல் ஆசிய பெண்’ என்கிற பெருமையைப் பெற்ற நடிகை மிச்சேல் யோ தனது 60 வயதில் திருமணம் செய்துகொண்டார். 19 ஆண்டுகளுக்கு முன்பே இவருக்கு நிச்சயம் நடைபெற்றது தான் இதில் சுவாரஸ்யமான விஷயம்!


மிச்செல் யோ


மலேசிய நாட்டைச் சேர்ந்த மிச்சேல் மம்மி 3 மற்றும் பல்வேறு ஜாக்கி சான், ஜெட்லீயின் படங்களில் நடித்து உலக ரசிகர்களிடையே பிரலமானவர். நடந்து முடிந்த ஆஸ்கர் விழாவில், தான் நடித்த Everything, Everywhere All at Once படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்த மிச்செல் யோ சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.


ஒரு ஆசிய  நடிகை ஆஸ்கர் விருது வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த அங்கீகாரத்திற்கு பிறகு மேலும் பலரால் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் ஒருவராக மாறிவிட்டார் மிச்செல் யோ. தற்போது இவரது திருமணம் மீண்டும் ஒரு முறை இவரை உலக அளவில் பெசுபொருளாக மாற்றியுள்ளது, யாராலும் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிரான விஷயம் இவரது திருமணத்தில் இருப்பதே இதற்கு காரணம்!


60 வயதில் திருமணம்






தற்போது தனது 60 வயதில் இருக்கும் மிச்செல், முன்னாள் எஃப் 1 ரேஸரான 77 வயதான ஜிம் டோட் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களின் திருமணம் நெருங்கிய குடும்பத்தினருக்கு மத்தியில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.


இந்நிலையில், திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜிம் டோட். மிக அழகான உடையணிந்த மாளிகை போன்ற இடத்தில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.  இவர்களின் திருமணத்துக்கான நிச்சயம் 19 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்து முடிந்துள்ளது.


மிச்செல் யோவின் கதை


1988ஆம் ஆண்டு டிக்ஸன் பூன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் மிச்செல். தனது திருமணம் நிகழ்ந்த மூன்று ஆண்டுகளில் இருவருக்கும் விவாகரத்தானது. இந்நிலையில்  ஜிம் டோட்டுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் வெளியே தெரிவிக்கப்படாத காரணங்களால் இந்த திருமணம் கிட்டதட்ட 19 ஆண்டுகள் கடந்துவிட்டிருப்பது தான் அனைவருக்கும் தற்போது புதிரான ஒரு விஷயமாக இருக்கிறது!