2017 ஆம் ஆண்டு லா லா லேண்ட் படத்தினைத் தொடர்ந்து தற்போது பூவர் திங்ஸ் படத்திற்கு ஆஸ்கர் வென்றுள்ளார் எம்மா ஸ்டோன்


ஆஸ்கர் 2024


2024 ஆம் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் வெற்றியாளர்களை முடிவு செய்வது நடிவர்களுக்கு மிகவும் சவாலான ஒரு முடிவாக இருந்திருக்கும் சிறந்த இயக்குநர் பிரிவில் ஹாலிவுட்டின் இரு மாபெரும் ஜாம்பவான்களாக மார்ட்டின் ஸ்கார்செஸி மற்றும் கிறிஸ்டோஃபர் நோலன் ஆகிய இருவருக்கு இடையில் கடுமையான போட்டி நிலவியது . இறுதியில் நோலனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து சிறந்த நடிகர் பிரிவில் பிராட்லீ கூப்பர் மற்றும் கிலியன் மர்ஃபிக்கு இடையில் போட்டி நிலவியது.


இரண்டாவது முறையாக ஆஸ்கர்




சிறந்த நடிகைக்கான பிரிவில் லிலி கிளாட்ஸ்டோன் மற்றும் எம்மா ஸ்டோனுக்கும் இடையில் போட்டி நிலவிய நிலையில் எம்மா ஸ்டோனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப் பட்டுள்ளது. லிலி கிளாட்ஸ்டோன் இந்த விருதை வென்றிருக்கும் பட்சத்தில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கரை வெல்லும் முதல் பழங்குடி இனப் பெண்ணாக அவர் இருந்திருப்பார். அதே நேரத்தில் எம்மா ஸ்டோன் இந்த விருதுக்கு முழுக்க முழுக்க தகுதியானவர் என்பதும் மறுக்கத்தக்கது இல்லை.


இரண்டாவது ஆஸ்கர்:


கடந்த 2017 ஆம் ஆண்டு லா லா லேண்ட் படத்திற்காக தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றார் எம்மா ஸ்டோன். பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தி அமேசிங் ஸ்பைடர்மேன் படத்தின் மூலம் பிரபலமானவர் எம்மா ஸ்டோன் . இந்தப் படத்தில் அவருடன் நடித்த ஆண்ட்ரியு கார்ஃபில்டை சில காலம் டேட் செய்து வந்தார். இதனைத் தொடர்ந்து மெக்ஸிக இயக்குநர் இனாரிடூ இயக்கிய பர்ட்மேன் (Birdman) படத்தில் அவரது நடித்து பெரிதும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு அவர் பரிந்துரை செய்யப் பட்டார்.


இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான லா லா லேண்ட் (La La Land) படம் அவரது கரியரில் முக்கியமான படமாக மாறியது. இந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் வென்றார். இதனைத் தொடர்ந்து மொத்த உலகச் சினிமாத் துறையிலும் அதிக சம்பளம் வாங்கும் பெண் என்கிற அளவிற்கு உச்சத்திற்கு சென்றார் அவர்.




தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த எம்மா ஸ்டோன் கடந்த ஆண்டு வெளியான பூவர் திங்ஸ் படத்தில்  நடித்து மீண்டும் ரைசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தப் படத்திற்காக தற்போது அவருக்கும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப் பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் தான் மிக பதட்டமடைந்திருந்ததாக கூறினார். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.