Operation Numkhor: போலி ஆவணங்கள் மற்றும் தூதரக பெயர்களைப் பயன்படுத்தி இந்தோ-பூட்டான் எல்லை வழியாக  சட்டவிரோதமாக சொகுசு கார்களை இந்தியாவிற்குள் கொண்டு வந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continues below advertisement

அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யும் உயர் ரக கார்களை கண்டறிய நாடு முழுவதும் ‘ஆபரேஷன் நம்கோர்' என்ற பெயரில் பல்வேறு இடங்களில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட 36 உயர் ரக வாகனங்களில் நடிகர் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான இரண்டு சொகுசு கார்களும் அடங்கும் என்று கேரள சுங்க அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 23) தெரிவித்துள்ளனர்.

துல்கர் சல்மான் - பிரித்வி ராஜ் வீட்டில் சோதனை:

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் பிரித்வி ராஜ் ஆகியோருக்கு கேரளத்தில் உள்ள கொச்சியில் பிரமாண்டமான சொகுசு பங்களாக்கள் இருக்கிறது. இவர்களது வீட்டில் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை மலையாள சினிமா வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியது. 

Continues below advertisement

குறிப்பாக பூடான் நாட்டில் விலை உயர்ந்த கார்களை வாங்கி அதனை இமாச்சல பிரதேசத்திற்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர் சிலர். இந்த விற்பனை நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறிவைத்து நடத்தப்பட்டாக சொல்லப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கு பண இழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் தான் இந்த சோதனை ஆபரேஷன் நம்கோர் என்ற பெயரில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்வி ராஜ் வீடுகள் உட்பட 30 இடங்களில் இந்த சோதனை மேற்கொண்டிருக்கின்றனர் சுங்கத்துறை அதிகாரிகள்.

கார்கள் பறிமுதல்:

இந்த சோதனையில் சட்டவிரோதமாக பூட்டான் நாட்டில் இராணுவத்தில் பயன்படுத்திய கார்களை வரி ஏய்ப்பு செய்து நடிகர் துல்கர் சல்மான் வாங்கியாது தெரியவந்துள்ளாதாக செய்திகள் கூறுகின்றன.  அந்தவகையில், துல்கர் சல்மானின் பெயரில் உள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் உள்பட இரண்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பிரித்வி ராஜ் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொச்சின் சுங்க ஆணையரகம் தரப்பில், ”கேரளாவில் மட்டும் இதுபோன்ற 150–200 வாகனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  அவற்றில் 36 வாகனங்கள் இன்றைய நடவடிக்கைகளில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வாகனங்களைக் கண்டுபிடித்து பாதுகாக்க தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று  கூறப்பட்டுள்ளது.