Actor Vimal: ‘கேலக்ஸி ஸ்டார்’ என்றால் சும்மாவா.. தேசிய விருது வென்ற படங்களில் அதிகம் நடித்த ஹீரோ விமல் தான்..!
கடந்த 20 ஆண்டுகளில் தேசிய விருதை பெற்ற படங்களில் அதிகம் நடித்த ஒரே தமிழ் நடிகர் விமல். நேரடியாக தேசிய விருதை பெறவில்லை என்றாலும் அவர் நடித்த படங்கள் தேசிய விருதை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் விமல். பசங்க, களவாணி திரைப்படம் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தூங்கா நகரம், வாகை சூடவா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆரம்ப காலகட்டத்தில் விஜய், அஜித் நடித்த கில்லி, கிரீடம் போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்த விமல், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மீனாட்சி சுந்தரம் என கதாபாத்திரத்தில் விமல் நடித்த அப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.
Just In





அதே போல அடுத்ததாக வெளிவந்த 'களவாணி' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. 1960ம் காலகட்டங்களில் இருந்த கிராமப்புற கதையை மையமாக ஏ. சற்குணம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் லீட் ரோலில் விமல் நடித்த இப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது.
2008ம் ஆண்டு 60 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஒரு நெசவாளரின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் விமல் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படமும் 2008ம் ஆண்டுக்கான தேசிய விருதை பெற்றது.
கடந்த 20 ஆண்டுகளில் தேசிய விருதை பெற்ற படங்களில் அதிகம் நடித்த ஒரே தமிழ் நடிகர் விமல். அவர் நேரடியாக தேசிய விருதை பெறவில்லை என்றாலும் அவர் நடித்த படங்கள் மதிப்புமிக்க தேசிய விருதை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் படத்தை தேர்வு செய்யும் விதத்தை வெளிப்படுத்துகிறது. நடிகர் விஜய்சேதுபதிக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஆண்டுக்கு அதிக படங்களில் விமல் நடிப்பில் வெளியாகி வந்தது.
கடந்த ஆண்டு விமல் நடித்த ’விலங்கு’ வெப் சீரிஸ் கூட அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. கிட்டதட்ட 3 ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த விமலுக்கு மீண்டும் திருப்புமுனை அமைந்துள்ளது. இனி தன்னை தொடர்ந்து திரையில் பார்க்கலாம் என விமல் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள 'துடிக்கும் கரங்கள்' திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.