Sachein Re-Release: கோடை விடுமுறைக்கு செம்ம ட்ரீட் - சச்சின் ரீ-ரிலீஸ் தேதி தெரியுமா?
Sachein Re-Release: விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சச்சின் திரைப்படம் ரீரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய், ஜெனிலியா, விவேக் நடிப்பில் வெளியான ‘சச்சின்’ திரைப்படத்தின் ரி -ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள
விஜய் நடிப்பில் வெளியான க்ளாசிக் படம் ‘சச்சின்’ 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு சச்சின் படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. ஏற்கனவே ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் ‘அப்படி போடு.. ‘ பாடலுக்கு வைப் செய்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகியது. தனலெட்சுமி, சரவண வேலு ஆகியோரை திரையில் பார்த்து ரசித்தனர்.
Just In




தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு, நடிகர் விஜய் அரசியல் பயணத்தை தொடங்கி ஓராண்டு கடந்துவிட்டது. பிறகு, விஜய் நடிக்கும் கடைசி படமும் அறிவிக்கப்பட்டது. ஹெச். வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் விஜய்க்கு கடைசிப் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், விஜய் படமும் வெளியாவது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் ரீ-ரிலீஸ்:
தாணு தயாரிப்பில் மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில் வெளியான படம் ‘சச்சின்’. விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, தாடி பாலாஜி ஆகியோர் நடித்திருப்பார்கள். தேவி ஸ்ரீ பிரசத் இசையில் உருவான பாடல்கள் ஹிட். ரசிகர்கள் கொண்டாடும் ப்ளேலிஸ்ட் ‘சச்சின்’.
காதல், நகைச்சுவை என அழகான படமாக சச்சின் இருக்கும். விஜய்யின் திரைப்பயணத்தில் க்யூட் மற்றும் க்ளாசிக் படமாக சச்சின் இருக்கிறது. சச்சின், ஷாலினி க்யூட் ரியாக்சன்ஸ், இருவருக்கும் இடயேயான உரையாடல், காதலை சொல்வது, வடிவேலு - சச்சின் இருவரின் காமெடி ட்ராக் என படத்தில் நிறைய ரசிக்க வைக்கும் காட்சிகள் இருக்கும். விஜய் நடிப்பும் ரசிக்கும்படி இருந்திருக்கும். கல்லூரி மாணவராக விஜய் நடிப்பு, படத்தில் ஜெனிலியா, விஜய் ஆடைகள் என நன்றாக இருக்கும். இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு,மீண்டும் திரையரங்கில் வெளியாகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் ஏப்ரல் 18-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. ரீ-ரிலீஸிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளத்தில் ட்ரெண் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.