2026 பொங்கலுக்கு விஜய் , சிவகார்த்திகேயன் , சூர்யா ஆகியோரின் படங்கள் தயாராகி வருகின்றன. இந்த படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களும் வரத் துவங்கியுள்ளன. அடுத்த இரு மாதங்களில் கவனிக்கத் தக்க பல படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. தனுஷ் , துல்கர் சல்மான் , கவின் ஆகிய நடிகர்களின் படங்கள்  நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. இந்த படங்கள் இந்த ஆண்டை சிறப்பாக முடித்து வைக்கும் என எதிர்பார்க்கலாம் 

Continues below advertisement

தேரே இஷ்க் மே (இந்தி)

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மூன்றாவது படம் தேரே இஷ்க் மேன். முன்னதாக ராஞ்சனா , அத்ரங்கி ரே ஆகிய இரு படங்களும் ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்பட்டு வசூல் ரீதியாக வெற்றிபெற்றன. பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி தமிழ் இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது 

now you see me : now you dont (ஆங்கிலம்)

மேஜிக் வித்தையை வைத்து உருவான ஹாலிவுட் படமான Now You See Me உலகளவில் ரசிகர்களை கவர்ந்த படம். இதுவரை வெளியான இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் தற்போது மூன்றாவது பாகமான 'now you see me : now you dont' வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஐசன்பெர்க், வூடி ஹாரெல்சன், டேவ் பிராங்கோ, இஸ்லா ஃபிஷர், ஜஸ்டிஸ் ஸ்மித், டொமினிக் செஸ்ஸா, அரியானா கிரீன்ப்ளாட், ரோசாமண்ட் பைக் மற்றும் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

Continues below advertisement

காந்தா

மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்பவர் துல்கர் சல்மான். இவர் அடுத்ததாக காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரகனி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் நடித்து கடைசியாக வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து  இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . வரும் நவம்பர் 14 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது .

கும்கி 2

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘கும்கி 2’. இப்படத்தில் புதுமுக நடிகர் மதி நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, நாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இப்படத்திற்கான இசையை நிவாஸ் கே. பிரசன்னாஅமைத்துள்ளார், ஒளிப்பதிவை சுகுமார் மேற்கொண்டுள்ளார். பென் ஸ்டூடியோஸ் மற்றும் பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா மற்றும் தவல் காடா இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். 'கும்கி 2’ மூலம் பிரபு சாலமன் தனது இயற்கைமிகு கதையம்சத்தையும், மனிதன்–விலங்கு உறவை மையமாகக் கொண்ட தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியையும் மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்த இருக்கிறார். நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிரது 

மாஸ்க்

வெற்றிமாறன் உதவி இயக்குநர் விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின் , ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள படம் மாஸ்க். ருஹானி சர்மா , சார்லீ , பாலசரவணன் , விஜே அர்ச்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 21 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது