குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் பிரபலமான நடிகர்களாக வலம் வருபவர்கள் பலரையும் இந்த சினிமா உலகம் கடந்து வந்துள்ளது. அந்த வரிசையில் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே நடித்து அசத்தியவர் நடிகை நிவேதா தாமஸ். சிவமயம், அரசி, ராஜ ராஜேஸ்வரி, தேன் மொழியாள் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.


பெரும்பாலும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நிவேதா தாமஸ், நடிகர் விஜய் தங்கையாக 'குருவி' படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ராஜாதி ராஜா, போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, தர்பார், பாபநாசம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.



தமிழை காட்டிலும் தற்போது அவர் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நிவேதா தாமஸ். அந்த வகையில் நந்த கிஷோர் எமானி இயக்கத்தில் செப்டம்பர் 6ம் தேதி வெளியாக உள்ள '35 சின்ன கதா காடு' என்ற படத்தில் லீட் ரோலில் குடும்ப தலைவியாக இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்தார்.


பிரியதர்ஷினி புல்கொண்டா, கிருஷ்ண தேஜா மற்றும் விஸ்வதேவ் ரச்சகொண்டா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாக உள்ளது. 


இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நிவேதா தாமஸிடம் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் ஒரு ஹோம் மேக்கராக இப்படத்தில் நடித்துள்ளேன். நிச்சயம் இந்த கேரக்டர் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இல்லத்தரசி கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நடிகை என வந்துவிட்டால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும். இது நல்ல கதையம்சம் கொண்ட ஒரு படம். நிச்சயம் மக்கள் இதை விரும்புவார்கள் என தெரிவித்து இருந்தார். 


எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடியவர் நடிகை நிவேதா தாமஸ் என்றாலும் அவர் தற்போது அதிக உடல் எடை கூடிவிட்டதால் அவரை சமூக வலைத்தளங்கள் எங்கும் பயங்கரமாக ட்ரோல் செய்து விமர்சித்து வருகிறார்கள். 






 


இது குறித்து நிவேதா தாமஸ் ரசிகை ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.


ஒரு ஆண் நடிகர் ஒரு திரைப்படத்திற்காக தன் உடல் எடையை கூட்டினால் “வாவ்.. வேற லெவல் டெடிகேஷன்”!


அதையே ஒரு பெண் நடிகர் செய்தால் “கல்யாண பூசணிக்கா மாதிரி இருக்கா”! வழக்கம் போல பாலின அடிப்படையிலான இரட்டை நிலை!


“35 - சின்ன கதை காடு” படத்திற்கு வாழ்த்துக்கள் - நிவேதா தாமஸ் என கூறி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் இந்த போஸ்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.