கைலாச அதிபர் நித்யானந்தாவின் உடல்நிலை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ‛எங்க சாமிஜி ஜம்முனு இருக்காரு... கும்முனு வருவாரு...’னு கைலாசா பக்தர்கள் ஒருபுறம் கதறிக் கொண்டிருக்க, ‛சும்மா அள்ளி விடாதீங்கய்யா... அவரை காலி பண்ணிட்டு, அந்த இடத்துக்கு வர்ற நீங்க ரெடியாயிட்டீங்க’ என, மற்றொரு தரப்பு ஓங்கி அடித்துக் கொண்டிருக்கிறது. 





‛இரண்டு பேர்ல யாரு சத்தம்னு அடுச்சுக்காட்டுங்க...’ என்பது போல, ஒரு தரப்பு ஒதுங்கி நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது, பேஸ்புக்கில் ஏதாவது ஒரு பதிவைப் போட்டு, தன் இருப்பை காட்டிக் கொண்டிருந்த நித்யானந்தா, சில நாட்களாக எந்த பதிவும் போடாமல் அமைதியாக இருந்தார். இதை வைத்து, நித்தி நித்திரை அடைந்துவிட்டார் என்றெல்லாம் பதிவுகள் வரத் தொடங்கின. 


ஆனாலும், அதற்கு நித்யானந்தா தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தான், நித்யானந்தா ஒரு பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், 


‛‛எனது அன்புள்ள பக்தர்கள் மற்றும் கைலாசவாசிகளுக்கு, தற்போது வரை ஆழமான சமாதியில் ஆழ்ந்திருக்கும் நான், என் பக்தர்களோடு உள்ளுணர்வில் இணைந்திருக்கிறேன். அதை நான் மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறேன். விரைவில் அனைத்தும் சரியாகி, என் வழக்கமான உடல்நிலை உடன் எனது சத்சங்கத்தை தொடங்குவேன். எனது தரிசனங்கள் இனி தடையில்லால் கிடைக்கும். இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,’’



என்பதைப் போல், அவர் பதிவு செய்துள்ளார். நித்யானந்தாவின் இந்த பதிவை பார்த்த அவரது பக்தர்கள், ‛வந்துட்டான்... வந்துட்டான்... வந்துட்டான்...’ என கேஜிஎப்., பார்மட்டில் சிலாகிக்கத் தொடங்கியுள்ளனர். ‛எங்க சாமி வரப்போறாருடா... இப்போ வாங்கடா பார்ப்போம்...’ என்பதைப் போல, கொண்டாடத் தொடங்கியுள்ளனர். 


‛எல்லா சரிப்பா... உங்க சாமி, முகத்தை காட்டாம, வெறும் பதிவை மட்டும் போட்டுட்டு இருந்தா எப்படி... அவரை ஒரு வீடியோ போடசொல்லுங்க’ என, பதிலுக்கு எதிர் தரப்பு இன்னும் தங்கள் நிலையில் நிலையாக இருந்து களமாடி வருகிறது. 


நித்தி எண்ட்ரி எவ்வாறு இருக்கப் போகிறது? கொத்து கொத்தாய் ஆபரணங்களை அள்ளி அணியும் அந்த நித்யானந்தாவை மீண்டும் காணலாமா என்கிற ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது ஒரு தரப்பு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண