பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் இருவரும் உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திர ஜோடிகள், இவர்கள் இருவரும்  ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டு கொடுப்பதில்லை. இருவருக்கும் இடையே பத்து ஆண்டுகள் வித்தியாசம் இருப்பினும் எண்ணங்களால் இருவரும் ஒரே போல சிந்தனையுடையவர்கள். ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டுள்ளனர். 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த காதல் ஜோடி அவரவரின் இலக்குகளை அடைய தவறவில்லை. 


சப்போர்ட்டிவ் ஜோடி :


சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஒருவரையொருவர் உயர்வாகப் பேசிக்கொண்டனர். அது மட்டுமின்றி அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் சப்போர்ட்டிவாக இருக்கிறார்கள். நிக் ஜோனாஸ், பிரியங்காவின் உச்சரிப்பு பற்றி பாராட்டி இருந்தார். மான் மேரி ஜான் பாடலில் பிரியங்கா சோப்ரா உச்சரிப்பை சரியாக செய்ததை அவர் அந்த நேர்காணலின் போது வெளிப்படுத்தியிருந்தார். 


 



விளையாடிய நண்பர்கள் :


முதல் முறையாக நிக் ஜோனாஸ் இங்கு வந்த போது பிரியங்காவின் நண்பர்கள் சிலர் ஹிந்தியில் உள்ள கெட்ட விஷயங்களையும், கெட்ட சொற்றொடர்களையும் பேச கற்றுக் கொடுத்துள்ளனர். நிக் அதை எப்படி பேசுகிறார் என்பதை பார்ப்பதற்காக அப்படி செய்துள்ளனர். அதற்கான அர்த்தத்தை அவர்கள் சொல்லவில்லை. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நானே அதை கண்டுபிடித்தேன். இப்போது ஒரு சில வார்த்தைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பெரும்பாலும் நான் உணவு சார்ந்த விஷயங்களை தான் பார்ப்பேன். 


பன்னீர் பிரியர் நிக் :


நிக் ஜோனாஸுக்கு மிகவம் விருப்பமான ஒரு உணவு பன்னீர். அது தான் பெஸ்ட் உணவு என கூறியிருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் இந்திய உணவுக்காக பிரியங்காவும் நிக்கும் இணைந்து செல்லும் இரண்டு ரெஸ்டாரண்ட் உள்ளன. நியூயார்க்கிலும் மிகவும் சுவையான இந்திய உணவுகள் கிடைக்கும் சோனா ரெஸ்டாரன்டிற்கு செல்வார்களாம். 


ஜிலேபியும் சமோசாவும் :


ரேபிட்-ஃபயர் ரவுண்டு நடைபெற்ற போது நிக் இரண்டு விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டது. குலாப் ஜாமூனுக்கு பதிலாக ஜிலேபியையும், ஸ்பிரிங் ரோலுக்கு  பதிலாக சமோசாவையும் தேர்ந்தெடுத்தார். அடுத்ததாக பிரியங்கா நடித்ததில் மிகவும் பிடித்தமான படம் பேவாட்ச் அல்லது பாஜிராவ் மஸ்தானி படமா என்றதற்கு அவரை பாஜிராவ் மஸ்தானி படத்தை தேர்வு செய்தார்.  இருப்பினும் தனக்கு பிரியங்கா நடித்த 'பர்ஃபி' படம் தான் ஃபேவரட் என கூறியிருந்தார்.