தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டாரராக கொண்டாடப்பட்டவர் நடிகர் சரத்குமார். அவரின் மகளும் பிரபலமான நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த ஜூலை 10ம் தேதி மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரின் திருமணமும் தாய்லாந்தில் உள்ள பீச் ரிசார்ட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது.
இருப்பினும் திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்களான மெஹந்தி, ஹல்தி, சங்கீத் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமே இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது. மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியா எங்கும் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. அது மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கும் இன்று விருந்து வைத்து உபசரித்தனர் சரத்குமார், வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் சச்தேவ்.
அப்போது பத்திரிகையாளர்களுடன் உரையாடல் நடைபெற்றது போது பேசிய நிக்கோலாய் சச்தேவ் எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் நிச்சயம் கூடிய விரைவில் தமிழை கற்றுக்கொள்வேன். இனி நான் சென்னையில் தான் இருக்க போகிறேன். வரலட்சுமி திருமணத்துக்கு பிறகு தன்னுடைய பெயரை மாற்றக்கொள்ள விரும்பினார். வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என மாற்றி கொள்ள போவதாக கூறினார். ஆனால் நான் அதை விரும்பவில்லை. அவர் எப்போதும் வரலட்சுமி சரத்குமார் என்றே அழைக்கப்படுவார். ஆனால் நான் அவருடைய பெயரை என்னுடைய பெயருடன் சேர்த்து கொள்ள போகிறேன். இனி என்னுடைய பெயர் நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ்.
வரலட்சுமி சரத்குமார் என்பது அவருடைய பாரம்பரியம். அதை நான் என்றும் கைவிடமாட்டேன். இதை நான் என்னுடைய மனைவிக்காக செய்கிறேன். ஆனால் அவருக்கு நீங்கள் அனைவரும் கொடுக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. எனக்கு அவரை பல ஆண்டுகளாக தெரியும். என்னை திருமணம் செய்து கொள்ள வைத்தவர் அவர் தான். ஆனால் அவருடைய ஃபேவரட் காதலன் நான் இல்லை. அவருக்கு சினிமா தான் முதல் காதல். நான் இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறேன். சினிமாவில் இருந்து பிரேக் எல்லாம் எடுத்துக் கொள்ள போவதில்லை. நான் என்னுடைய மனைவிக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பேன் என பேசி இருந்தார்.
நிக்கோலாய் சச்தேவ் பேசிய இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஏராளமானோர் நிக்கோலாய் சச்தேவ்வை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். அவர்களின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.