நாளை வெளியாகும் கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை உலகமெங்கிலும் வெளியாக இருக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கூலி படத்திற்கு உலகமெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. முன்பதிவுகளில் மட்டும் கூலி திரைப்படம் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதிகப்படியாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூலிக்கும் முதல் படமாக கூலி படம் சாதனை படைக்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படியான நிலையில் கூலி படத்தை பார்வையிட்ட தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்துள்ளார். 

கூலி பற்றி உதயநிதி ஸ்டாலின் 

"தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்துள்ள நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். கூலி படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது கூலி. கூலி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

போராட்டங்களுக்கு பதில் என்ன

2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மிக நெருக்கடியான அரசியல் சூழல் நிலவி வருகிறது. மேலும் பல்வேறு சமூக நிகழ்வுகள் திமுக ஆட்சியின்  மீதான விமர்சனங்களை  பலப்படுத்தியுள்ளன. விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட அஜித் குமார். நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குமார். தற்போது சென்னை மாநகராட்சி துப்புறவு பணியாளர்களின் போராட்டம் என பல்வேறு பிரச்சனைகளை அரசு கையாளும் விதத்தில் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த பிரச்சனைகள் பற்றி எந்த வித கருத்தும் தெரிவிக்கா துணை முதல்வர் உதயநிதி நாளை வெளியாக இருக்கும் படத்தை பார்த்து அதற்கு ரிவியு செய்திருப்பது மேலும் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. அவரது பதிவிற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எதிப்பை பதிவு செய்து வருகிறார்.