தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக கொடிகட்டி பறக்கும் விஜய் நடிப்பில் சமீபகாலமாக வெளியான திரைப்படங்கள் அதிக அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல அவரின் அரசியல் பிரவேசம் குறித்தும் பல ஆண்டுகளாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. அதை நேற்று (பிப்ரவரி 2) உறுதிப்படுத்தும் விதமாக அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பாக வெளியிட்டார் நடிகர் விஜய். அவரின் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயரிட்டுள்ளதாக சோஷியல் மீடியா மூலம் அறிவித்தார். 


Vijay political party : இது ஆரம்பம்தான்! TVK கட்சியின் பெயரை டீகோட் செய்து ட்ரெண்டிங் செய்யும் நெட்டிசன்கள்... 

அதிரடி அறிவிப்பு :


நடிகர் விஜய் அரசியலில் இறங்கிய உடனே பல தெளிவான முடிவுகளை எடுத்துள்ளார். அதாவது 2024ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை என்றும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்த பிறகு சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாகவும் அதை தொடர்ந்து முழு நேரமாக அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜயின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரணத்தால் அவர் GOAT படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்ற பேச்சுக்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் அல்லது ஷங்கராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.  



கட்சிக்கு தலைவர்களின் பெயர்கள் :


இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் விஜய் அரசியலில் இறங்குகிறேன் என பகிரங்கமாக அறிக்கைவிட்டதும் அரசியல் விமர்சனங்களை இப்போதில் இருந்தே எதிர்கொள்ள துவங்கிவிட்டார். அரசியல் கட்சிகளின் பெயர்கள் பொதுவான பெயர்களாக இருப்பதே வழக்கம். ஆனால் அதிலும் சில காட்சிகள் மறைமுகமாக அந்த கட்சியின் தலைவர்களின் பெயர்கள் உள்ளடங்கும் வகையில் கட்சியின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் YS ராஜசேகர ரெட்டி பெயரை மறைமுகமா க யுவஜன ஸ்ராமிகா ரைத்து (YSR) கட்சிக்கும், N. ரங்கசாமியின் கட்சியின் பெயரை என்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரிலும் செயல்பட்டு வருகிறது. 


விஜய் கட்சியின் டீகோட் :


இந்நிலையில் நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சியின் பெயரில் மறைமுகமாக தளபதி விஜய் பெயர் இடம்பெறும் வகையில் கட்சியின் பெயரை தேர்ந்து எடுத்துள்ளனர் என சிலர் டீகோட் செய்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.