கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.


https://www.netflix.com/in/title/81417659#:~:text=A%20nomadic%20gangster%20finds%20himself,Aishwarya%20Lekshmi%20and%20James%20Cosmo.


நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கும் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்துக்கு 18+ என்கிற மதிப்பீட்டை அந்தத் தளம் வழங்கியுள்ளது. படத்தில் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள், சில கடினமான வார்த்தைகள் ஆகியவை அதிகம் இருப்பதால் இந்தப் படத்திற்கு A தணிக்கை மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


ஜகமே தந்திரம் திரைப்படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். திரையரங்க தணிக்கை போல அல்லாமல் ஓடிடியில் வன்முறை, ஆபாசக் காட்சிகளுக்கான தளர்வுகளும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெகமே தந்திரம் ஜூன் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.