Vijay 69: விஜய் 69 படத்தின் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ்: குழம்பிய ரசிகர்கள்!
Vijay 69: விஜய் 69 படம் குறித்தான தகவலை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

‘விஜய் 69’ (Vijay 69) படத்தை பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
தளபதி 69
தமிழக வெற்றிக் கழகம் என்கிற தனது அரசியல் கட்சியின் பெயரை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் களத்திலும் மற்றும் திரைப்படத் துறையிலும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விஜய் அரசியலுக்கு வந்தால் எந்த9க் கட்சியோடு கூட்டணி வைப்பார் என்கிற கேள்வி அனைவரது மனதிலும் இருக்கிறது. பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அவரது அரசியல் வருகையை ஆதரித்தும் மேலும் பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.
Just In




விஜய்யின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒருபக்கம் அவரை அரசியல் தலைவராக பார்க்கும ஆசை இருந்தாலும் இனிமேல் அவரை நடிகராக திரையில் பார்க்க முடியாத வருத்தம் இருக்கதான் செய்கிறது. தங்களது சிறு வயது முதல் பார்த்து வளர்ந்த ஒரு நடிகரை இனிமேல் மீண்டும் திரையில் பார்க்க முடியாதது அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் விஜயின் 69ஆவது படமே அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.
வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ், தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம், என பல இயக்குநர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இப்படியான நிலையில் விஜய் 69 என்கிற படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை குழப்பியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்
விஜய் 69
பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் விஜய் 69. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நெட்ஃப்ளிக்ஸ் “ வாழ்க்கை என்பது ஒரு ரேஸ்” என்று கேப்ஷன் கொடுத்துள்ளது. மேலும் இந்தப் போஸ்டரில் அக்ஷய் ராய் மற்றும் சைக்கிள் ஓட்டியபடி பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டவர்கள் காணப்படுகிறார்கள்.
இப்படத்திற்கு ‘விஜய் 69’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இதனை தளபதி விஜய்யின் 69ஆவது படத்துடன் குழப்பிக் கொண்டுள்ளார்கள். இந்தப் படத்திற்கான ப்ரோமோஷனுக்காக இந்தப் படத்திற்கு இப்படி டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.