நல்ல ஆக்‌ஷன் திரைப்படம்  பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டதாகத் தோன்றினால் உங்களது காத்திருப்பு நிறைவடைந்தது. கால் கடோட், ஆலியா பட் இணைந்து நடித்திருக்கு ஹார்ட் ஆஃப் ஸ்டோன் (heart of stone) திரைப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.


நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் (heart of stone). இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரின் முதல் பாகத்தில் கால் கடோட் தனது ஸ்டண்ட் காட்சிகளால் நம்மை மிரளவைக்கிறார். அதை நாம் பார்த்து பிரமித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று வில்லியாக தோன்றும் ஆலியா பட் நம்மை வாய் பிளக்கச் செய்துவிடுகிறார்.


முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரங்கள் வழிநடத்திச் செல்லும் திரைப்படமாக இருக்கும் என்பதை இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.


ஹார்ட் ஆஃப் ஸ்டோன் (heart of stone) ட்ரெய்லர்


மிஷன் இம்பாசிபிள் படத்தின் தயாரிப்பு குழு மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இணைந்து வழங்கியுள்ளப் படம் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் (heart of stone). கால் கடோட், ஆலியா பட்  ஜேமீ டோர்னன் ஆகியவர்கள் இந்தத் தொடரில்  நடித்துள்ளார்கள்.



 


இந்தக் குழுவில் இருப்பவர்களுக்கு எந்த வித அடையாமோ அரசியல் சார்போ கிடையாது கிடையாது . அவர்களின் உயிர்களுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இந்தக் குழுவின் மிகப்பெரிய பலம் என்றால் ஹார்ட் என்கிற ஒரு கருவி இவர்களிடம் இருக்கிறது .


இந்தக் கருவியை பயன்படுத்தி எந்த அரசை வேண்டுமானால் இவர்கள் கவிழ்க்கலாம். எந்த தொழில்நுட்பத்தை வேண்டுமானாலும் இருந்த இடத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம். இந்தக் கருவியை பயன்படுத்தி உலகத்தில் அமைதியை நிலைநாட்ட போராடுகிறார்கள் இந்த அமைப்பில் இருப்பவர்கள். ஒருவேளை இந்தக் கருவியை யாராவது திருடிக் கொண்டுபோனால் என்னவாகும்?  அப்படியான நோக்கத்தில் வருகிறார் ஆலியா பட்.


தி ஹார்ட் கருவையை திருடிச்செல்லும் ஆலியா பட்டிடம் இருந்து மீட்க முயல்கிறார் கால் கடோட். இவர்கள் இருவருக்கும் இடையிலான சண்டைக்காட்சிகள் என விறுவிறுப்பாக ஒரு ட்ரெய்லராக அமைந்திருக்கிறது. வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.


 அலியா பட்


ஆலியா பட் தற்போது தங்கல் படத்தின் இயக்குநர்  நிதேஷ் திவாரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும் ஆலியா பட் சீதையாகவும் நடிக்க இருக்கிறார்கள்.