ராம் சரண்


மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரண் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ஆர் .ஆர். ஆர் திரைப்படத்தின் வழியாக அவர் உலக அளவில் பிரபலமானார். நடிப்பைத் தவிர்த்து சினிமாவில் பல்வேறு தைரியமான முயற்சிகளுக்காகவும் ராம் சரண் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.


2010 ஆம் ஆண்டு ராம்சரண் நடிப்பில் வெளியாகி பெரும் நஷ்டத்தை சந்தித்தப் படம் ஆரஞ்சு. இந்த இழப்பை சரிசெய்ய 3.5 கோடி ரூபாயை தயாரிப்பாளர் நாகபாபுவிற்கு திருப்பிக் கொடுத்தார் ராம்சரண். இந்த செயல் அவருக்கு ரசிகர்களிடம் தனி மரியாதையைப் பெற்றுத் தந்தது. 


கேம் சேஞ்சர்


தற்போது ஷங்கர் இயக்கிவரும் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்க இருக்கிறார் ராம் சரண். முன்னதாக மாவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ராம் சரண், இந்த முறை ஒரு சிறப்பான அரசியல் கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.


மகளை வரவேற்ற ராம்சரண்


ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012 ம் ஆண்டு உபாசனா என்பவருடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய முதல் பெண் குழந்தையை கையிலேந்தினார் ராம் சரண்.


சிரஞ்சீவி, ராம் சரணை சந்தித்த நெட்ஃளிக்ஸ் தலைமை அதிகாரி


ஆர் ஆர் ஆர் படத்தைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் ஒரு தனி அந்தஸ்த்தைப் பெற்றுள்ள ராம் சரண் விரைவில் ஹாலிவுட் செல்வதற்கான அத்தனை சாத்தியங்களும் தெரிகின்றன. ஆர் ஆர் ஆர் படம் வெளியான போது  ஹாலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஜே ஜே ஏப்ரஹாம்ஸிடம் இருந்து அவருக்கு விருந்து அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் இயக்குநர்கள் கெளன்சிலிடம் இருந்து அவருக்கு ஒரு சிறப்பு அழைப்பும் வந்தது குறிப்பிடத்தக்கது.


தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸின் உயர் அதிகாரியான டெட் ஸரண்டோஸை சந்தித்துள்ளார் நடிகர் ராம் சரண். இந்தியா வருகைத் தந்துள்ள டெட் ஹைதராபாதில் விமானத்தை விட்டு இறங்கியதும் நேராக நடிகர் சீரஞ்சிவி மற்றும் ராம் சரண் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். 






இந்த சந்திப்பிறகான பின் பல ஆர்வமூட்டும் காரணங்கள் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில் உள்ளன. தற்போதைக்கு மெகா குடும்பத்துடன் டெட் ஸரண்டோஸ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.