நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி ரஜினி மற்றும் கமல் ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கமலை ரஜினி நடிப்பில் மிஞ்சிவிட்டதாக ரஜினி ரசிகர்களும். கமல் முன் ரஜினி டம்மியாகிவிட்டதாக கமல் ரசிகர்களும் சண்டை போட தொடங்கியுள்ளார்கள். 

Continues below advertisement

ரஜினி கமலை இயக்கும் நெல்சன் 

தமிழ் திரையுலகின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகிறார்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இருவரும் ஆரம்ப காலத்தில் இணைந்து பல படங்களில் நடித்து வந்து பின் தனித்தனி பாதையில் பயனித்தனர். இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது சாத்தியமற்றது என நம்பி வந்த சூழலில் இருவரும் இணைந்து நடிக்க முன்வந்துள்ளார்கள். மலையாளத்தில் மோகன்லால் மம்மூட்டி பேட்ரியட் படத்தில் இணைந்து நடித்துள்ளது போல தமிழுக்கு இந்த கூட்டணி அமைந்துள்ளது. 

பாலசந்தர், பாரதிராஜா, ருத்ரய்யா, சி வி ஸ்ரீதர் மற்றும் எஸ் பி முத்துராமன் போன்ற மூத்த இயக்குநர்களும் ஒரே படத்தில் ரஜினி & கமலை இயக்கியுள்ளனர், ஆனால் அது ரஜினி கமல் பெரிய ஸ்டார்களாக ஆவதற்கு முன். தற்போது இந்த வரிசையில் நெல்சன் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு ரஜினி நடித்த கூலி மற்றும் கமல் நடித்த தக் லைஃப் ஆகிய இரு படங்களும் ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதனால் நெல்சனால் இரு தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்த முடியுமா என்கிற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது 

Continues below advertisement

தொடங்கிய ரஜினி கமல் ரசிகர் மோதல்

ஆனால் தற்போது புது பிரச்சனை ஒன்றை தொடங்கி வைத்துள்ளார்கள் ரசிகர்கள். இந்த ப்ரோமோவில் யார் சிறப்பாக நடித்துள்ளார்கள் என்கிற விவாதம் ரஜினி கமல் ரசிகர்களிடையே விவாதம் தொடங்கியுள்ளது. கமல் தான் கெத்து என ஒருதரப்பு சொல்ல ரஜினி எல்லாம் கமலை தூக்கி சாப்பிட்டுவார் என இன்னொரு தரப்பு கூறி வருகிறார்கள். இதனால் சமூக வலைதளம் ஒரே ரஜினி கமல் பதிவுகளாக களேரபடப்பட்டுள்ளது