நீனா குப்தா :


பாலிவுட்டில் சீனியர் நடிகரான நீனா குப்தா பல படங்களில் நடித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு வெளியான  சாத் சாத் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் . மேலும் அதே ஆண்டு வெளியான் காந்தி படத்தில் காந்திக்கு மகளாக நடித்திருந்தார். அதிகமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நீனா குப்தா சீரியல் உலகில் ஒரு வலம் வந்தார் என்றுதான் கூற வேண்டும் . பின்னர் 2018 ஆம் ஆண்டு வெளியான படாய் ஹோ என்னும் படம் மூலமாக சகெண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். சபீத்தில் கூட அமேசான் பிரைமில் வெளியான பஞ்சாயத் என்னும் வெப் தொடரிலும் , நெட்ஃபிளிக்ஸில் வெளியான மசாபா மசாபா சீசன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். 






என்னுடன் நடிக்க விரும்புவதில்லை :


நீனா குப்தாவிற்கு தற்போது 63 வயதாகிறது. இவரிடம் சினிமாவில் வயது மற்றும் பாலின வித்தியாசம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்ட பொழுது சற்றும் யோசிக்காமல் பதிலளித்தார் . “நான் நடிக்க ஒப்பந்தமான இரண்டு மூன்று படங்களில் யார் எனக்கு ஜோடியாக நடிக்க போகிறார்கள் என இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு அவர் நீங்களே யாரையாவது பரிந்துரை  செய்யுங்களேன் என கூறினார். இது மிகவும் கடினமான விஷயம்' ஏனென்றால் என்னுடன் வேலை செய்ய யாரையும் கண்டுபிடிப்பது கடினம்.என்னை விட வயது குறைந்த  இளம் நடிகையுடன்தான் பலரும் நடிக்க விரும்புகிறார்கள். , இருப்பினும் நான் அவர்களை விட இளமையாகத் தோன்றலாம். அது முக்கியமல்ல .நம் சமூகம் மாறவில்லை. நீங்களும் (பெண்கள் )  நானும் சிறுபான்மையினர். நாம் ஒரு ஆணாதிக்க சமூகத்தில் வாழ்கிறோம், அது அப்படியே இருக்கும் “ என்றார். மேலும் பேசிய அவர்  தன்னை விட சிறியவராக இருந்தாலும் தனக்கு ஜோடியாக நடித்ததற்காக ராம் கபூருக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக தெரிவித்தார்.