தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை நயன்தாரா. வாழ்வில் பல சவால்களையும் சறுக்கல்களையும் எதிர்கொண்டு திரைவாழ்க்கையில் மாஸ் கம்பேக் கொடுத்த சிங்கப் பெண் இவர். தமிழ் சினிமாவில் கதை நாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களும் வெற்றி காணும் என்ற நடைமுறையை ஏற்டுபத்திய கதாநாயகி. நடிகை நயன்தாரா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது கணவன் விக்னேஷ் சிவன் இருவரின் நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நயன் விக்கியின் க்யூட் புகைப்படங்களை இங்கு காணலாம்.




நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி ''நானும் ரௌடி தான்'' திரைப்படம் மூலம் அறிமுகமாகினர். அப்போதே இருவரும் காதல் வயப்பட்டனர். காதல் மட்டும் அல்ல அந்த திரைப்படமும் மெகா ஹிட் ஆனது. 




நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில்,இவர்களின் திருமணம் எப்போது என்ற நிலையான கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் எழுந்த வண்ணம் இருந்தது. விடையளிக்கும் விதமாக ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்திருந்தனர். 




கடந்த ஜூன் மாதம் 9 ஆம் நாள், நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் ஷாருக்கான், ஏ ஆர் ரகுமான், ரஜினிகாந்த் என பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.



 


நயன் விக்கி திருமணத்தில் புகைப்படங்கள் எடுக்க யாரையும் அனுமதிக்க படாத நிலையில்,  இவர்களின் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. விரைவில் அந்த வீடியோ நெட்ப்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது .




திருமணம் முடிந்த வண்ணம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தேனிலவுக்காக நிறைய நாடுகள் சென்று வந்தனர், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தேனிலவு புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து அதை வைரலாக்கினர்.



இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தாங்கள் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டதாக அறிவித்திருந்தனர். இந்த செய்தி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் வாடகை தாய் முறை மூலமாக குழந்தை பெற்றெடுத்தாக தகவல் வெளியானது.  நயன்தாராவை தங்கம், கண்மணி என்று செல்லமாக அலைக்கும் விக்கி, அவரிகளின் குழந்தைகை உயிர் மற்றும் உலகம் என்று அழைத்து வருகின்றனர்.


 


நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன், மனைவி நயன்தாராவுக்கு வாழ்த்து கூறி சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். புகைப்படங்களுடன் ''என் வாழ்க்கை நிறைவடைந்ததாக நான் உணர்கிறேன். வாழ்க்கை மிகவும் அழகாகவும், நிறைவாகவும் காணப்படுகிறது.நமது குழந்தைகளுடன் நாம் இதே போல் சந்தோஷமாக இருக்க நான் வாழ்த்துகிறேன்.நாம் அனைவரும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொண்டுள்ளோம். கடவுளின் அருளோடும், பிரபஞ்சத்தின் அறிவோடும்; ஒரு அழகான வாழ்க்கையை நாம் உருவாக்குவோம்! என்றென்றும் உன்னை காதலிக்கிறேன்’’ என வாழ்த்தியுள்ளார் விக்னேஷ் சிவன்.