பல பாலிவுட் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் கடந்த காலங்களில் வெவ்வேறு காலக்கட்டத்தில் தங்களை மதம் மாற்றிக் கொண்டுள்ளனர். வகுப்புவாரியாகப் வலுவான பின்புலத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயம் அல்ல. மேலும், பிரபலங்கள் எப்போதுமே 'காதலுக்கு' மதம் அல்லது மொழி போன்ற தடைகள் இல்லை என்பதை பல்வேறு காலக்கட்டத்தில் வெளிப்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாகத் தென்னிந்திய நடிகைகளைப் பற்றிப் பேசுகையில்,காதலுக்காகவோ, மன அமைதிக்காகவோ அல்லது ஆன்மீக விழிப்புணர்வுக்குப் பிறகு பல்வேறு மதங்களுக்கு மாறிய பலர் உள்ளனர்.
குஷ்பு
குஷ்பு மும்பையில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் 29 செப்டம்பர் 1970 அன்று நக்கத் கான் என்ற பெயரில் பிறந்தார். அவருடைய பெற்றோர் அவருக்கு குஷ்பு என்ற மேடைப் பெயரை வைத்தனர். இருப்பினும், அவர் இயக்குநர் சுந்தர்.சி-ஐத் திருமணம் செய்வதற்காக இந்து மதத்திற்கு மாறினார், அதன் பின்னர், நடிகர் குஷ்பு தன்னை குஷ்பு சுந்தர் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். தனது பெயரை மாற்றுவது அவரது முடிவு என்று கூறப்படுகிறது.
நயன்தாரா
மலையாள சிரிய கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்த கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 2011ல் இந்து மதத்துக்கு மாறினார். ஆகஸ்ட் 7, 2011 அன்று சென்னையில் உள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் அவர் இந்து மதத்துக்கு மாறினார். இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன்.
மோனிகா
இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் மோனிகாவின் தந்தை இந்து மற்றும் தாயார் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமிற்கு மதம் மாறிய பிறகு எம்.ஜி. ரஹீமா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இதனை அவர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதோடு, தான் இஸ்லாமின் கொள்கைகளை விரும்புவதாகவும், அதனால், மதம் மாற முடிவு செய்ததாகவும் கூறினார்
நக்மா
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் கரானா மொகுடு மற்றும் நாகார்ஜுனாவுடன் அல்லரி அல்லுடு ஆகிய படங்களில் நடித்த நக்மா, நந்திதா அரவிந்த் மொரார்ஜியாக பிறந்தார். அவர் 2007ல் கிறிஸ்தவத்தில் தனது நம்பிக்கையைக் கண்டறிந்த பிறகு ஞானஸ்நானம் எடுத்தார்.
ஜோதிகா
தாகூர், மாஸ் மற்றும் ஷாக் போன்ற திரைப்படங்களின் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ஜோதிகாவின் தந்தை பஞ்சாபி, தாய் இஸ்லாமியர். ஜோதிகாவின் இயற்பெயர் சாதனா. நடிகை நக்மா இவரது ஒன்றுவிட்ட சகோதரி. இருப்பினும், நடிகர் சூர்யாவை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதால், ஜோதிகா அனைத்து மதங்களிலும் கலப்பு நம்பிக்கை கொண்டுள்ளவராக அறியப்படுகிறார். இருப்பினும் அவர் சட்டப்பூர்வமாக மாறியது குறித்து எந்த தகவலும் இல்லை.