தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ் , மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அவர் நடிப்பில் சமீபத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த படமும் வெளியாகவில்லை. நேரடியாக ஓடிடியில் வெளியான டெஸ்ட் படமும் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. அந்த வகையில் நயன்தாரா மலையாளத்தில் நடித்துள்ள படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனமீர்த்துள்ளது
டியர் ஸ்டுடண்ட்ஸ் டீசர்
நடிகை நயன்தாரா மற்றும் நிவின் பாலி இணைந்து மலையாளத்தில் நடித்துள்ள படம் 'டியர் ஸ்டுடண்ட்ஸ்'. ஜார்ஜ் ஃபிலிம் ராய் மற்றும் சந்தீப் குமார் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார்கள். டியர் ஸ்டுடன்ட்ஸ் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது
நயன்தாரா நடிக்கும் படங்கள்
இப்படம் தவிர்த்து மலையாளத்தில் மம்மூட்டி மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். கிட்டதட்ட 9 ஆண்டுகள் கழித்து மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கிறார். தெலுங்கி சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் நாயகியா நடிக்கிறார். இந்தியில் கே.ஜி.எஃப் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் டாக்சிக் படத்தில் நயன்தாரா உள்ளார். தமிழில் நயன்தாரா நடிக்கும் பல்வேறு படங்களின் அறிவிப்பு வெளியாகி இன்னும் ஆரம்பகட்ட படப்பிடிப்பிலேயே இருந்து வருகின்றன. அந்த வகையில் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் படங்களில் ஒன்று. இவை தவிர்த்து கவின் நடிக்கும் 'ஹாய்' , மண்ணாங்கட்டி மற்றும் ராக்காய் ஆகிய படங்கள் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கின்றன.