தமிழ் சினிமாவில் மிகவும் சாதாரண ஒரு நடிகையாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவே 'லேடி சூப்பர் ஸ்டார்' என கொண்டாடப்படும் அளவுக்கு ஆளுமையான ஒரு நடிகையாக தன்னுடைய அந்தஸ்தை உயர்த்தி கொண்டவர் நடிகை நயன்தாரா. 2005ம் ஆண்டு வெளியான 'ஐயா' படத்தில் பாவாடை தாவணி போட்ட ஒரு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு நடிக்க பெரிய அளவு ஸ்கோப் இல்லாததால் ஜொலிக்க முடியாமல் போனது.
ரஜினிகாந்த் ஜோடி :
அதை தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சந்திரமுகி' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு. ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அவரின் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்தார். அதை தொடர்ந்து எக்கச்சக்கமான வாய்ப்புகள் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் குவிய துவங்கியது.
லேடி சூப்பர் ஸ்டார் :
நயன்தாரா தன்னுடைய திரைப்பயணத்தில் ஏராளமான ஏற்றத்தையும் சறுக்கல்களையும் சந்தித்தாலும் அவரின் அழகும் புகழும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது. ஒரு காலகட்டத்திற்கு பிறகு வுமன் சென்ட்ரிக் படங்கள், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் கொண்டாடப்பட்டார்.
பாலிவுட் என்ட்ரி :
பாலிவுட்டில் 'ஜவான்' படம் மூலம் அடியெடுத்து வைத்த நயன்தாராவுக்கு முதல் படத்திலேயே பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் நல்ல வசூலையும் ஈட்டி 1000 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு தொடர்ச்சியாக அவருக்கு பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வரவில்லை. தமிழில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான இறைவன், அன்னபூரணி உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
அடுத்து மலையாளம் :
அதனால் நயன்தாரா தற்போது தனது கவனத்தை இந்தி, தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி மலையாளம் பக்கம் சென்றுள்ளது. நடிகர் நிவின் பாலி ஜோடியாக 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
வெற்றிகரமான தொழிலதிபர்:
திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அதே வேளையில் ஒரு தொழிலதிபராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நயன்தாரா. பெமி 9 என்ற சானிட்டரி நாப்கின் பிராண்ட், 9 ஸ்கின், லிப்பாம் கம்பெனி உள்ளிட்ட பல பிசினஸ் செய்யும் தொழில் அதிபராக வலம் வருகிறார். இது தவிர ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல படங்களையும் தயாரித்து வருகிறார். குழந்தை, கணவன் என குடும்ப தலைவியாகவும் தன்னுடைய பங்களிப்பை மிக சிறப்பாக செய்து வரும் நயன்தாரா ஒரு 'சூப்பர் வுமன்' என்று அவரின் ரசிகர்கள் பாராட்டு மழையில் நினைய வைக்கிறார்கள்.
சிம்பிள் லுக்கில் நயன் :
நயன்தாரா மிகவும் மிகவும் சிம்பிள் லுக்கில் புடவையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். மைல்டு வெளிச்சத்தில் தகதகவென மின்னுகிறார். அவரின் வசீகர பார்வை ரசிகர்களை தாக்கி வருகிறது. அவரின் இந்த போஸ்ட் எக்கச்சக்கமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.