கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என அறியப்படுபவர் நடிகை நயன்தாரா. நடிக்க வந்த காலக்கட்டத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் , சில காலம் அவர் சந்தித்த விமர்சனங்கள் அவரை மிகவும் மன அழுத்தத்தில் தள்ளியது. ஆனாலும் அதிலிருந்து மீண்டு , தன்னை தானே செய்துக்கொண்டு கோலிவுட்டில் பிரகாசிக்க தொடங்கினார். அதுவரையில் கதநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்து வந்த நயன்தாரா, சமீப காலமாக டாப் ஹீரோக்கள் மற்றும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். நானும் ரௌடிதான் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கிசு கிசுக்கப்பட்டார் நயன்தாரா. ஆரம்பத்தில் எல்லா செலிபிரட்டி காதலர்களை போலவும் நாங்கள் நண்பர்கள்தான் என நயன் - விக்கி ஜோடிகள் சொன்னாலும், சமூக வலைத்தளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கமே ! கண்மணியே என பதிவிட்டு உறுதிப்படுத்திவிட்டார் விக்னேஷ் சிவன்.
காதலர்களாக மட்டுமே இல்லாமல் , இருவரும் இணைந்து பிஸினஸ் பார்டனராகவும் மாறினர். அப்படி தொடங்கப்பட்டதுதான் ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் . கூழாங்கல் என்னும் படத்தை சமீபத்தில் தயாரித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் பல சர்வதேச விருதுகளை குவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க நயன்தாரா தற்போது தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மருத்துவர் ரெனிடா ராஜனுடன் இணைந்து The lip balm company என்ற ஒரு ஸ்கின் கேர் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
உதடு பராமரிப்பு மற்றும் பாதுகாபிற்கான தயாரிப்புகளை இதன் மூலம் நயன்தாரா வழங்கவுள்ளார். அதற்கான பிராண்ட் அம்பாசிட்டராகவும் நயன்தாரா உள்ளார். “ என்னை போல வித்தியாசமானவற்றை விரும்பும் நபர்களுக்கு தங்கள் புராடக்ட் பொருத்தமாக இருக்கும்” என புரமோஷன் செய்துள்ளார் நயன்தாரா. முன்னதாக நடிகைகள் கீர்த்தி சுரேஷ் , கத்ரினா கைஃப் உள்ளிட்ட நடிகைகளும் சொந்தமான ஸ்கின்கேர் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.