Nayan Wedding Gift: விக்னேஷ் சிவன் பேரில் ரூ.20 கோடியில் பங்களா.. கணவருக்கு நயன் கொடுத்த அன்பு பரிசு..!
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான பங்களாவை பரிசாக வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான பங்களாவை பரிசாக வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா தனது கணவரான விக்னேஷ் சிவனை நேற்று கரம் பிடித்தார். இவர்களது திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தநிலையில், நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் பேரில் 20 கோடி மதிப்பில் பங்களா ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளதாகவும், இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவிற்கு 5 கோடி மதிப்பில் வைர மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Just In




முன்னதாக, இந்திய திரையுலகின் பிரபல நடிகையும், லேடி சூப்பர்ஸ்டாருமானவர் நயன்தாராவும் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இந்தத்திருமணத்தில் நடிகர்கள் ரஜினி, கார்த்தி, சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் பங்கேற்றனர். திருமணம் முடிந்த உடன் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருப்பதி செல்வார்கள் என்று தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில், நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் வால்வோ காரில் சென்னையில் இருந்து நேரடியாக திருப்பதி சென்றனர்.
சமீபகாலங்களில் நயன்தாரா – விக்னேஷ்சிவன் ஜோடி அடிக்கடி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, திருமணம் முடிந்த பிறகு முதன்முறையாக இருவரும் புதுமணத்தம்பதிகளாக திருப்பதி வெங்காடசலபதி ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.
நயன்தாரா மஞ்சள் நிற புடவையிலும், விக்னேஷ் சிவன் பட்டு வேஷ்டி, பட்டுசட்டையிலும் கோவிலுக்கு வந்தனர். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த நயன்தாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்து மதத்தை தழுவியதாக கூறப்படுகிறது. மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற விக்னேஷ்சிவன் – நயன்தாரா திருமணம்கூட இந்து மத முறைப்படியே நடைபெற்றுள்ளது. நயன்தாரா மஞ்சள்கயிறு சூடிய மாங்கல்யத்தை பார்க்கும் புகைப்படம் நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.