தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நயன்தாரா, இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், தற்போது நடிகை மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். இந்நிலையில், தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து நயன்தாரா பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Continues below advertisement

நயன்தாராவின் முதல் சம்பளம் 

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு தனது முதல் வேலை மாடலிங் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார். அது ஒரு பத்திரிகை அட்டைப்படத்திற்கான போட்டோஷூட் கிடையாது என்றும், ஒரு ஃபேஷன் நிகழ்ச்சிக்காக மேற்கொண்ட மாடலிங் பணியாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பணிக்காக தனக்கு சுமார் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இன்று கோடிகளில் சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக அறியப்படும் நயன்தாராவின் முதல் சம்பளம் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை மட்டுமே என்பது அவரது வளர்ச்சிப் பயணத்தை எடுத்துக்காட்டும் தகவலாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் மாடலிங் செய்த அவர், பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நயன்தாரா, தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Continues below advertisement

ஹாய்

இதனிடையே நயன்தாரா தற்போது நடிகர் கவினுடன் இணைந்து நடித்துள்ள ‘Hi’ திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ராதிகா சரத்குமார், பிரபு, வி.டி.வி. கணேஷ், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘Hi’ படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.