நயன்தாரா
தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா கன்னடம் , தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் நிவின் பாலி , மம்மூட்டி , மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். கன்னடத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் டாக்சிக் படத்திலும் நடித்து வருகிறார் . அடுத்தபடியாக தெலுங்கில் சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
18 கோடி கேட்ட நயன்தாரா
நடிகர் சிரஞ்சீவி தற்போது த்ரிஷாவுடன் விஸ்வாம்பரா படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அனில் ராவிபுடி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தில் நயன்தாராவை படக்குழு அனுகியுள்ளார்கள். இந்த படத்தில் நடிக்க நயன் 18 கோடி சம்பளமாக கேட்டதும் படக்குழு திகைத்துள்ளது. ஆனால் கதையில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் படக்குழு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
3 மடங்கு சம்பளத்தை குறைத்த நயன்தாரா
படக்குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தபின் நயன்தாரா தனது சம்பளத்தை மூன்று மடங்காக குறைத்து 6 கோடி ரூபாய் சம்பளமாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவுக்கு கதை பிடித்திருந்ததால் அவர் இந்த முடிவுக்கு வந்தாரா அல்லது ஷேர் அடிப்படையில் மீதி சம்பளத்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளாரா என்கிற தகவல் வெளியாகவில்லை. முதற்கட்டமாக மே 22 ஆம் தேதி ஹைதராபாதில் 10 நாள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
மூக்குத்தி அம்மன் 2
தமிழில் நயன் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சிமேக்ஸ், ஐ.வி. ஓய் என்டர்டெய்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் -2 பாகம் உருவாகிறது.குஷ்பு, மீனா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஒரு சிறிய இடைவேளை எடுத்துள்ளது படக்குழு.