நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கட் அவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்கில் நயன்தாரா அம்மன் வேடத்தில் இருக்கும் பிரம்மாண்ட கட் அவுட் நிறுவப்பட்டுள்ளது. ஒரு நடிகைக்கு இவ்வளவு உயரத்தில் கட் அவுட் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

Continues below advertisement

வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நயன்தாராவுக்கு அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கட் அவுட் தொடர்பான புகைப்படங்கள்  சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.